வியாழன், 24 நவம்பர், 2016

நாடாளுமன்றச் செயல்பாடுகள் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப் பட்டு வரும் நாள் முதலாக, முக்கியமான
தலைவர்களின், குறிப்பாக அறிவார்ந்த  நிபுணர்களின்
நாடாளுமன்ற உரைகளைக் கேட்டு வருகிறேன்.
பார்த்து வருகிறேன். வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ்,
சீத்தராம் யெச்சூரி, ஜெயராம் ரமேஷ், வீரப்ப மொய்லி,
ப சிதம்பரம், மன்மோகன் சிங் ஆகியோரின் உரைகள்
உட்பட.
**
டாக்டர் மன்மோகன்சிங் பேச ஆரம்பித்தபோதே,
குறைந்தது 15 நிமிடமாவது பேசுவார் என்று
எதிர்பார்த்தேன். ஆனால் ஏழே நிமிடங்களில்
உரையை முடித்து விட்டார். அவர் முப்பது நிமிடம்
பேச விரும்பினாலும், ஹமீது அன்சாரி அவரை
அனுமதிப்பார். ஆனால், துரதிருஷ்ட வசமாக,
டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் அரசியல்வாதி
என்ற நிலையில் நின்று உரையாற்றி விட்டு முடித்து
விட்டார். He might have decided that it was sufficient to play for the gallery.
**
பொருளியல் நோக்கில் ஆற்றும் உரை வேறு; அரசியல்
நோக்கில் ஆற்றும் உரை வேறு. சரி, வேறொரு
சந்தர்ப்பத்தில், மன்மோகன் அவர்களின்
பொருட்செறிவான உரையைக் கேட்கலாம் என்று
நினைத்து அமைதியானேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக