செவ்வாய், 15 நவம்பர், 2016

கறுப்புப் பணத்தை ஒழிப்பது என்பதன் பொருள் என்ன?
------------------------------------------------------------------------------------------------------
என்னிடம் ஒரு கோடி ரூபாய் கறுப்புப் பணம் உள்ளது.
இதை ஒழிப்பது என்றால் என்ன? இந்த ஒரு கோடி
ரூபாயையும் அரசாங்கம் கைப்பற்றுவது என்று 
பொருள் அல்ல. மாறாக, இந்த ஒரு கோடி ரூபாயை
வங்கியில் போட வைப்பது என்றே பொருள்.
வங்கியில் போடும்போது, இதுவரை நான் கணக்கு
காட்டாத ஒரு கோடி ரூபாய் என் கணக்கில்
வந்து விடுகிறது. கணக்கில் வந்த பிறகு இந்த
ஒரு கோடி ரூபாய்க்கு நான் வரி கட்ட வேண்டிய
நிலை ஏற்படுகிறது.
எவ்வளவு வரி கட்ட வேண்டும்? 30 சதம் வரி.
அதாவது ஒரு கோடி ரூபாய்க்கு ரூ 30 லட்சம்
வரி கட்ட வேண்டும். அவ்வளவுதான். மீதி
70 லட்சம் என்னிடம் இருக்கும்.
ரூ 500, ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால்
ஏற்படும் நிகர பலன் இதுதான்.
---------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய இக்குறுங் கட்டுரை பொருளியல் கோட்பாடு சார்ந்து
எழுதப் பட்டுள்ளது. இது அரசியல் கட்டுரை அல்ல.
சதா சர்வ காலமும் மோடி ஜெபம் பண்ணிக்
கொண்டிருப்பது நம்மால் இயலாதது. ஒரு முதலாளித்துவப்
பொருளாதாரத்தில், கருப்புப்பணத்தை எப்படிக்
கையாள்வார்கள் என்பது குறித்தே எமது கட்டுரை.
இது ஏற்கனவே 1978இல் மொரார்ஜி தேசாய் காலத்தில்
செய்யப்பட்ட ஒன்று.
---------------------------------------------------------------------------------------------------------
எந்த ஒரு பொருளாதாரத்திலும் சில ஒழுங்குகள் உண்டு.
முதலாளியப் பொருளாதாரத்திலும் சில ஒழுங்குகள் உண்டு.
சில பல முதலாளிகள் (capitalists) இந்த ஒழுங்கை மீறும் போது,
அதுவும் அடிக்கடி மீறும் போது, அவர்களை ஓரளவு
கட்டுக்குள் வைக்க வேண்டிய தேவை முதலாளியப்
பொருளாதாரத்திற்கு ஏற்படுகிறது. அப்படி ஓரளவு கட்டுக்குள்
வைக்க முயலும் நடவடிக்கைதான் இது. இதற்கு மேல்
இதில் எதுவும் இல்லை. கருப்புப்பண ஒழிப்பு என்ற பெயரில்,
நமது வசீகரமான கற்பனைகளுக்கு முதலாளித்துவப்
பொருளியலில் இடம் இல்லை. இங்கு மோடி, மொரார்ஜி
தேசாய் என்பவர்களுக்கு இடையில் எந்த வேறுபாடும் கிடையாது.
அவர்கள் முதலாளிய பொருளியலில் பிரதிநிதிகள். அவ்வளவே.     

முதலாளித்துவப் பொருளாதாரம் ஒரு பிரச்சினையை
எப்படிச் சமாளிக்கும் என்பது பற்றி மட்டுமே எமது
கட்டுரையும் கருத்துக்களும் அமைந்துள்ளன. அவற்றில்
அரசியல் அம்சங்கள் குவிமையமாக இல்லை. மொரார்ஜி
தேசாய் காலத்தில், இணையதளம், முகநூல், மொபைல்
போன்ற வசதிகள் இல்லை. இன்று உள்ளது. ஆக தொழில்நுட்பம்
இந்த வேறுபாட்டை ஏற்படுத்தி உள்ளது.


எமது கட்டுரைகள் மோடி பற்றிய அரசியல் விமர்சனக்
கட்டுரைகள் அல்ல. அவை பின்னர் எழுதப்படும். தற்போது,
முதலாளித்துவப் பொருளாதாரம் குறித்த, academic தன்மையில்
அமைந்த குறுங் கட்டுரைகளே எழுதப் பட்டுள்ளன. அருள் கூர்ந்து
எல்லாக் கட்டுரைகளையும் படிக்கவும். அவை என்னுடைய
டைம்லைனில் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக