திங்கள், 21 நவம்பர், 2016

வேந்தர் மூவீஸ் மதன் திருப்பூரில் கைது!
கல்வித்தந்தை பச்சமுத்துவின் கையாள் மதன்
300 கோடி ரூபாய் கறுப்புப்பணம் பதுக்கப்பட்ட
இடங்கள் பற்றி துப்புக் கொடுத்த மதன்!
---------------------------------------------------------------------------------------
கல்வித்தந்தை பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்து
அவர்கள் உலகம் புகழும் விதத்தில் கல்வித்தொண்டு
ஆற்றி வருகிறார். இவரின் கையாளாக இருந்த,
வசூல் ஏஜண்டாகச் செயல்பட்ட மதன் என்பவரை
திருப்பூரில் தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.
இத்தகவலை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அதிகார
பூர்வமாக இன்று (21.11.2016) அறிவித்தார்.

மருத்துவக் கல்லூரி அட்மிஷனில் சுமார் 300 கோடி
தொகை வசூலானதாகவும் அத்தொகை பதுக்கி
வைக்கப்பட்ட மூன்று இடங்கள் பற்றி மதன்
உண்மையைக் கக்கி இருப்பதாகவும், பெயர்
சொல்ல விரும்பாத போலீஸ் அதிகாரி தெரிவித்து
உள்ளார்.

பிற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு கல்விச் சேவை
அளித்து, ஒவ்வொரு சூத்திரக் குடும்பத்திலும் ஒரு
பொறியியல் பட்டதாரியை உருவாக்கிய கல்வித்
தந்தை பாரிவேந்தரின் நம்பகமான ஏஜெண்டான
மதன் அவர்களைக் கைது செய்த தமிழக காவல்
துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மதனின் கைது பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மீது
பார்ப்பனீயம் தொடுக்கும் தாக்குதல்!
***************************************************************

  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக