என்னிடம் ஒரு கோடி ரூபாய் கறுப்புப் பணம் உள்ளது!
மோடியின் அறிவிப்பால் எனக்கு எவ்வளவு நஷ்டம்?
------------------------------------------------------------------------------------------------
1) உலகப் பொருளாதாரம் முழுவதும் கரன்சிப்
பொருளாதாரமே. அதாவது கரன்சி நோட்டு மூலமே
பொருளாதாரம் செயல்படும். அதாவது, உலகப்
பொருளாதாரம் பண்டமாற்றுப் பொருளாதாரம் அல்ல.
(Not a barter system).
2) என்னிடம் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணமாக
உள்ளது. அவ்வளவும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள்.
நான் ஒரு முக்கியமான அரசியல்வாதியின் பினாமி.
3) சற்றுமுன் எனக்கு ஒரு போன் வந்தது. பேசியவர்
என் தலைவர். அவரின் பினாமிதான் நான். எனது
ஈழ ஆதரவுக் கொள்கை குறித்து உங்களுக்கெல்லாம்
நன்கு தெரியும்தானே.
4) தலைவர் எனக்கு ஒரு உத்தரவு போட்டார். இன்னும்
ஒரு மாதத்திற்குள் என்னிடம் உள்ள ரூ ஒரு கோடியை
வங்கியில் கொடுத்து மாற்றி, செல்லுபடியாகும்
ரூபாய் நோட்டுகளாக மாற்றி வைக்கச் சொன்னார்.
5) தலைவர் கூறியபடி நான் மாற்றி விடுவேன். ஆனால்,
இந்தப் பணம் என் கணக்கில் வந்து விடும். இதற்கு
நான் வரி கட்டியாக வேண்டும். ரூ ஒரு கோடிக்கு
வரி ரூ 30 லட்சம் ஆகும். எனவே எப்படியும் வரும்
2017 மார்ச் 31க்குள் இந்த ரூ 30 லட்சம் வரியை நான்
கட்டியாக வேண்டும்.
6) ஆக, ஒரு கோடியில் 30 லட்சம் போக, ரூ 70 லட்சம்
எனக்கு மிஞ்சும். இதற்கு என் தலைவர் ஓகே சொல்லி
விட்டார். அதாவது, என்னுடைய கறுப்புப் பணம்
இப்போது வெள்ளையாகி விட்டது, ரூ 30 லட்சம்
செலவில்.
7) இருந்தாலும் எனக்கு ஒரு பயம் வரத்தான் செய்கிறது.
ஒரு கோடி ரூபாய் வருமானம் என்பது எனக்கு
சாத்தியம் இல்லை. நான் படிக்கவும் இல்லை.
நல்ல வேலையும் பார்க்கவில்லை. வியாபாரமும்
கிடையாது. உனக்கு எப்படி ஒரு கோடி ரூபாய்
வருமானம் என்று வருமானவரித் துறை கேட்டால்
என்னிடம் பதில் கிடையாது.
8) இருந்தாலும் எனக்கு ஒரு சந்தோசம். காசு உள்ள நான்
பட வேண்டிய கவலையை, முகநூலில் காசு இல்லாத
பலர் பட்டுக் கொண்டு இருக்கிறானே என்பதுதான்.
எனக்காகக் கண்ணீர் சிந்தும் இந்தக் கோமாளிகளை
நினைத்து என் கவலையை நான் மறக்கிறேன்.
*************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக