வெள்ளி, 18 நவம்பர், 2016

இடக்கரடக்கல்
----------------------------
இடக்கர் + அடக்கல் = இடக்கரடக்கல்.
இடக்கரான சொற்களை அடக்கிக் கூறுவது என்று பொருள்.
இது தமிழ் இலக்கணம் சார்ந்தது.
மலம் கழித்த பிறகு, நாம் கழுவுவது எதை?
ஆனால் நாம் "கால் கழுவினேன்" என்று கூறுகிறோம்.
**
அந்தச் சொல்லை அப்படியே கூறுவது முகச் சுளிப்பை
ஏற்படுத்தும். எனவே அந்தச் சொல்லைத்த தவிர்த்து
விட்டு, வேறு ஒரு சொல்லை பயன்படுத்துகிறோம்.
இவ்வாறு பயன்படுத்துவது இடக்கரடக்கல் ஆகும்.
**
பின்நவீனத்துவம் வந்த பிறகு, அது இடக்கரடக்கலை
முற்றிலுமாக நிராகரித்து, தொடர்புடைய சொல்லை
அப்படியே பயன்படுத்துகிறது.
**
பெருமாள் முருகன் என்ற பின்நவீனத்துவ எழுத்தாளர்
"கெட்ட வார்த்தை பேசுவோம்" என்ற நூலையும்
"பீக்கதைகள்" என்ற நூலையும் எழுதினர். பொதுவாக
ஓர் அவையில் "பீ" என்று சொல்வதில்.
இடக்கர் அடக்கலாக, நரகல்  என்றோ மலம் என்றோ
சொல்கிறோம். ஆனால் பீ என்றுதான் சொல்ல வேண்டும்
என்று பின்நவீனத்துவம் வலியுறுத்துகிறது.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக