சனி, 5 நவம்பர், 2016

தடுப்பூசிகள் அறியவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டவை!
தடுப்பூசிகளுக்கு எதிராக இஸ்லாமிய மதவாதிகள்!
-------------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------------------
முஸ்லீம் குழந்தைகள் உயிர்ப்பலி என்ற எமது
முந்திய கட்டுரையில் தோழர் ஜான் ரூபர்ட்
என்னும் இளம் பொறியாளர் சில பின்னூட்டங்களை
எழுதி இருந்தார். அவை மிக அற்புதமான அறிவியல்
விளக்கங்கள். அவற்றை இங்கு பதிவு செய்கிறோம்.

பிற்போக்கான மதவாத மூட நம்பிக்கைகளின்
முதுகெலும்பை முறிப்பவை தோழர் ஜான் ரூபர்ட்
அவர்களின் விளக்கங்கள். அவற்றைக் காண்போம்.
--------------------------------------------------------------------------------------------- 
1) தடுப்பூசி நஞ்சு அல்ல.
------------------------------------------------
ஓருயிரிக்கு நஞ்சாயிருப்பது இன்னொரு உயிரிக்கு நஞ்சாயிருக்கவேண்டிய தேவையில்லை. குறிப்பாக அலெத்ரின் என்றபொருள் செவ்வந்திப்பூவில் இருக்கிறது. இது பூச்சிகளுக்கு நஞ்சு ஆனால் மனிதனுக்கு நஞ்சன்று.. 

மீர்க்காட் எனும்பூனைகளுக்கு தேளின் கொடுக்கு நஞ்சன்று அனால் மனிதனுக்கும் மற்றவிலங்குகளுக்கும் நஞ்சன்று. 

பான் குட்கா போன்ற பொருளை மிகச்சிறிதளவு ஊர்வனவற்றிற்குக்கொடுத்தாலும் இறந்துவிடுகிறது. ஆனால் மனிதன் இறப்பதில்லை. (இங்கே பாதிக்கும் தன்மை மாறுபடுகிறது.)

நஞ்சும் நஞ்சல்லாமல் இருப்பது உடலிலிருக்கும் ஆண்டிபாடிகள் இவற்றையெல்லாம் பொறுத்தது. பொத்தம்பொதுவாக தடுப்பூசிகள் நஞ்சுகள் என்பது அபத்தம். அது எப்படியெல்லாம் நோயைக்கட்டுப்படுத்துகிறது என்பதை அறியாமல் கூறுவது சரியன்று.


2) இந்தியாவில் ஏன் தடுப்பூசி தேவை?
----------------------------------------------------------------------
அம்மை வரும் சூழல் ஒருகுழந்தைக்கு இல்லையெனும்போது அக்குழந்தைக்கு அம்மைக்கான தடுப்பூசி தேவையில்லை. 
ஒருவேளை விண்வெளியின் ஆய்வுக்கூடத்தில் ஒருகுழந்தைப்பிறக்குமானால் சில கிருமிகளேயில்லாத அந்த ஆய்வுக்கூடத்தில் உள்ள அந்தகுழந்தைக்கு சில தடுப்பூசிகள் தேவைப்படாது. 
ஆனால் அப்படியொரு சூழல் சாதாரண இந்தியக்குடிமகன்வீட்டில் இல்லை. மிகச்சுகாதாரமான சூழலில் வளர்த்துவிடமுடியாதநிலையில் இருக்கும் ஏழைகளுக்கு என்று இந்தியாவில் சட்டதிட்டங்களை வரைமுறைப்படுத்தமுடியாது. 

அதனால் தான் பரவலாக எல்லாம் செய்யப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: எமது முந்தைய கட்டுரையையும் படிக்கவும்.
அதன் மூலம் மேலும் விளக்கம் பெற இயலும்.
***************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக