ரூ 500, ரூ 1000 நோட்டுக்கள் செல்லாது!
அரசு அறிவிப்பு! வைகோ கலக்கம்!!
-------------------------------------------------------------------
இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களிலேயே
மிகவும் அதிகமாக கலக்கம் அடைந்துள்ளார் வைகோ.
ஒரு கண்டன அறிக்கை வெளியிடக் கூட இயலாமல்
மனம் பேதலித்துக் கிடக்கிறார் வைகோ!
சாமானிய மக்களுக்கு வைகோவின் கலக்கம்
பற்றிப் புரியாது. ஏனெனில், செருப்பு எங்கே
கடிக்கிறது என்று செருப்பைப் போட்டு
இருப்பவனுக்குத் தானே தெரியும்!
The wearer knows where the shoe pinches!
---------------------------------------------------------------------------------------------------
மொரார்ஜி தேசாயும் மோடியும் மட்டுமே
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று
அறிவிக்கும் துணிவு பெற்று இருந்தனர்!
------------------------------------------------------------------------
ரூ 1000, ரூ 5000, ரூ 10000 ஆகிய நோட்டுகளை
செல்லாது என்று அறிவித்தார் மொரார்ஜி தேசாய்.
தேசாய் பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராக
இருந்தவர் ஹெச் எம் பட்டேல்.
இது நடந்தது 1978இல். அதன் பிறகு வந்த பல
இந்திய பிரதமர்கள் இந்த நடவடிக்கையை
மேற்கொள்ளவில்லை.
தற்போது நரேந்திர மோடி 2016இல் ரூ 500, ரூ 1000
நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்துள்ளார்.
1960-70களில்நாட்டில் ரூ 1000, ரூ 5000, ரூ 10000 ஆகிய
நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அப்போது
நாடாளுமன்றத்தில் பேசிய மார்க்சிஸ்ட் எம்.பி.
ஜோதிர் மொய் பாசு (கவனிக்கவும்: ஜோதி பாசு அல்ல,
ஜோதிபாசு மேற்கு வங்க முதல்வர்) ஐந்து ரூபாய்
நோட்டு வரை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்
என்று பேசினார்.
தற்போது ரூ 500, ரூ 1000 ஆகிய நோட்டுகளை
செல்லாது என்று அறிவித்துள்ளார் மோடி.
இதனால் கவலைப்பட வேண்டியவர்கள்
சாதாரண மக்கள் அல்ல.
பின்குறிப்பு: கன்டெய்னரில் பிடிபட்ட பணம் எத்தனை
கோடி என்று நினைவு இருக்கிறதா? தேர்தல் ஆணையம்
பிடித்ததே, மறந்து விட்டதா? அவ்வளவு கோடிப் பணமும்
தங்கமாகவோ ரியல் எஸ்டேட் முதலீடாகவோ
இருந்ததா? அல்லது ரூ 1000 நோட்டாக இருந்ததா?
கறுப்புப் பணத்தை யாரும் கரன்சி நோட்டாக
வைத்திருக்க மாட்டார்கள் என்று சொல்லும்
அறிவாளிகள் சிந்திக்கவும்.
திருத்தம்:
---------------------
இந்திரா காந்தி காலத்தில் இது நிகழ்ந்தது என்று முதலில்
எழுதி இருந்தேன். அது என்னுடைய நினைவில் இருந்து
எழுதியது. தற்போது விவரங்களை சரிபார்த்தபின்,
மொரார்ஜி தேசாய் என்று திருத்தியுள்ளேன்.
வாசகர்கள் கவனிக்கவும்.
***********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக