திங்கள், 21 நவம்பர், 2016

கல்வித் தந்தை பாரிவேந்தர் அவர்களின்
ஏஜெண்டான மதன் அவர்களைக்
கைது செய்ததில் மனித உரிமை மீறல்!
மனித உரிமைப் போராளிகளே அணிதிரளுங்கள்!
----------------------------------------------------------------------------------------
கல்வித்தந்தை பாரிவேந்தரின் உதவியாளரும்
மாபெரும் சமூக என்ஜீனியருமான (social engineer)
மதன் அவர்களைக் கைது செய்ததில் மனித
உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.

அவரின் இரு மனைவிகளும் அவரைச் சந்திக்க
அனுமதிக்கப் பட்டனர். என்றாலும் இது போதாது.
அவரின் இரு மனைவியரும் அவருடன் தங்கி இருக்க
அனுமதிக்கப் படாதது மனித உரிமை மீறல் ஆகும்.

மேலும் அவரின் மூன்றாவது மனைவி அந்தஸ்தில்
உள்ள வர்ஷா என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை
செய்து வருகின்றனர். இது சட்ட விரோதமானது.

இது குறித்து எழும்பூரில் மதன் அவர்களின்
வழக்கறிஞர் அளித்த நேர்காணல் தொலைக் காட்சிகளில்
ஒளிபரப்பாகி உள்ளது.

மதன் அவர்களைக் கைது செய்ததே மனித உரிமை
மீறல்தான் என்கிறார் வழக்கறிஞர்.

மனித உரிமையைப் பாதுகாக்க அணி திரள்வோம்!
*************************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக