காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வோம் வாருங்கள்!
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சம்பாதிப்போம்!
அரசு, பொதுத்துறை ஊழியர்கள் ஊடக
அன்பர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
-----------------------------------------------------------------------------------------------
இது சம்பாதிப்பதற்கான நேரம்! இந்த மாதிரி வாய்ப்பு
இன்னொரு முறை வராது!
எனக்கு கொஞ்சம் பெரிய இடத்துத் தொடர்பு உண்டு
என்பது நீங்கள் அறிந்ததே. தற்போது ஒரு மிகப் பெரிய
மனிதரை, அவரின் அழைப்பின் பேரில் சென்று
சந்தித்தேன். அவர் மிகப்பெரிய ஒரு சூழலியல்
போராளி. அவர் நடத்தும் ஒரு என்.ஜி.ஓ மூலம்
அவருக்கு வெளிநாட்டுப் பணம் வருகிறது.
அவர் ஒரு முக்கியமான ப்ராஜெக்டை என்னிடம்
ஒப்படைத்துள்ளார்.
இந்த ப்ராஜெக்டின் மதிப்பு 5C. முதல் கட்டமாக
ரூ 2C ஒப்படைக்கப்படும். அந்த 2C ப்ராஜெக்டை
வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தால், உடனே
மீதி 3C மதிப்புள்ள ப்ராஜெக்ட் ஒப்படைக்கப் படும்.
தற்போது நான் உங்களையெல்லாம் நம்பி, முதல்
கட்டமாக 2C ப்ராஜெக்டை ஏற்றுக் கொண்டு விட்டேன்.
இது வெற்றியடைந்தால் எனக்கு 40 சதம் கமிஷன்
கிடைக்கும். அதாவது என்னிடம் ஒப்படைக்கப்பட்ட
2C க்குப் பதிலாக, நான் 1.2Cயை பெரிய மனிதரிடம்
ஒப்படைத்தால் போதும். அதாவது 80 லட்சம்
கமிஷன் சுளையாக முதலிலேயே வந்து விடுகிறது.
இதுதான் ப்ராஜெக்டின் ரகசியம். தற்போது நான்
உங்களையும் இந்த ப்ராஜெக்டில் சேர்க்க
விரும்புகிறேன். உங்களுக்கு நான் 25 சதம் கமிஷன்
தந்து விடுகிறேன். அதாவது அவர் தருகிற மொத்த
கமிஷன் 40 சதம். அதில் உங்களுக்கு 25 சதமும்
எனக்கு 15 சதமும் என்று பகிர்ந்து கொள்வோம்.
முதல் கட்டமாக, இத்திட்டத்தில் இணையும்
ஒவ்வொரு நபரிடமும் 1L தரப்படும். ப்ராஜெக்டை
வெற்றிகரமாக முடித்த பிறகு, உங்கள் கமிஷனை
எடுத்துக் கொண்டு, நீங்கள் என்னிடம் 75,000
ஒப்படைத்தால் போதும்.
உங்களிடம் 500, 1000 நோட்டுகளை ஒப்படைப்பேன்.
நீங்கள் 2000 நோட்டுகளாக திருப்பி ஒப்படைத்தால்
போதும்.
இந்த வேலைக்கு, இளைஞர்களை விட, நடுத்தர வயது
உடைய, பணி ஒய்வு பெற்ற, அரசு ஊழியர்களாக
இருந்தால் நல்லது. அப்போதுதான் சந்தேகம் வராது.
வாருங்கள் நண்பர்களே. இந்த ப்ராஜெக்டில் சேர்ந்து
சம்பாதிக்கப் பாருங்கள். நம் மீது யாருக்கும்
சந்தேகம் வராதபடி இருக்க சில வேலைகளைச்
செய்யப் போகிறேன். கருப்புப்பண ஒழிப்பு மக்கள்
இயக்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பிக்கப்
போகிறேன். அந்த அமைப்பின் சார்பாக,
சென்னை பிரஸ் கிளப்பில் ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு
செய்யப் போகிறேன். இதற்கு ரூ 6000 (ரூ ஆறாயிரம்
மட்டும்) செலவாகும்.
அடுத்த கட்டமாக, வள்ளுவர் கோட்டத்தில் ஒரு
தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறேன்.
இதற்குச் செலவு ரூ 10,000 (ரூ பத்தாயிரம் மட்டும்).
இதெல்லாம் என் செலவு. இப்போராட்டங்களில்
நீங்களும் கலந்து கொண்டு, சமூகப் போராளி
அந்தஸ்த்தைப் பெறலாம். யாருக்கும் சந்தேகமும்
வராது.
வாருங்கள்! சம்பாதியுங்கள்!! இத்திட்டம் உங்களுக்குப்
பிடித்திருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய
நிலவழித் தொலைபேசி எண்: 044- 229453201.
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக