புதன், 23 நவம்பர், 2016

இடைத்தேர்தல் முடிவு உணர்த்தும் செய்தி!
தமிழக அரசியலின் தெளிவான ஒரே சித்திரம்!
-------------------------------------------------------------------------------
1) தேமுதிக என்ற கட்சிக்கு தமிழக அரசியலில்
இடமில்லை என்பதே இடைத்தேர்தல் உணர்த்தும்
செய்தி.

2) திமுக, அஇஅதிமுக என்ற இரு பெரும் திராவிடக்
கட்சிகளுக்கு அடுத்த இடத்தில், மூன்றாவது  கட்சியாக
தேமுதிக இருந்தது என்பது உண்மை. அந்த மூன்றாவது
இடத்தை தேமுதிக நிரந்தரமாக இழந்து விட்டது
என்பதாய் வாக்காளர்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

3) இனி என்றாவது அந்த மூன்றாவது இடத்தை, தேமுதிக
பிடிக்க முடியுமா என்றால், இல்லை என்பதே நிலவரம்.
ஏனெனில், தேமுதிக ஒரு கட்சியே இல்லை; அதாவது ஒரு
கட்சி என்ற குறைந்தபட்ச வடிவத்தில் கூட அது இல்லை.
விஜயகாந்த், அவரின் மனைவி, அவரின் மச்சான்
சுதீஷ் என்று இந்த மூன்று பேர் மட்டுமே கட்சி என்பதாக
தேமுதிக சுருங்கிப் போய்விட்டது. அரசியல் என்பது
பெரும் வீச்சைக் கோருவது. அரசியலின் அத்தேவையை
அக்கா-மாமா-மச்சான் என்ற அச்சில் மட்டுமே சுழலும்
தேமுதிகவால் என்றுமே நிறைவேற்ற இயலாது.

4) தேமுதிக மூன்றாவது இடத்தில் இருந்து வெளியேறி
விட்டதால், அந்த இடத்திற்கு வேறு யாராவது
வருவார்கள் அல்லவா! வாக்குவங்கி அடிப்படையிலும்
சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள்
அடிப்படையிலும் பாமக  மூன்றாவது இடத்தைக்
கோருகிறது. எனினும் பாமகவுக்கு மூன்றாவது
இடத்தை வழங்க இயலாது. ஏனெனில் பாமக ஒரு
sectarian கட்சி. இன்னமும் வன்னியப் பெருங்குடி
மக்களையே அச்சாகக் கொண்டு சுழலும் கட்சி.
அது அனைவருக்குமான கட்சி என்ற அந்தஸ்தை
ஒருநாளும் பெற இயலாது. மேலும் அதன் தலித்
எதிர்ப்புப் போக்கு அதை அனைவருக்கும் பொதுவான
கட்சியாக உருவாக்காது.

5) எனவே மூன்றாவது  இடம் பாஜவுக்குத்தான். அக்கட்சி
திட்டவட்டமான கொள்கைகளை நிலைப்பாடுகளைக்
கொண்டது. திராவிட அரசியலை நிராகரிக்கும்
மக்களுக்கு புகலிடம் வழங்க பாஜகவால் மட்டுமே
முடியும்.

6) ஆக மொத்தத்தில், தேமுதிக தன்னுடைய இடம்,
அந்தஸ்து ஆகிய அனைத்தையும் நிரந்தரமாக
இழக்கிறது. தேமுதிக காலி செய்த வீட்டில் பாஜக
குடியேறுகிறது.

7) மற்றக் கட்சிகளில் பாமக மட்டுமே, தொடர்ந்து
கடுமையாக உழைப்பதன் மூலம் தன்னுடைய
ஐந்து சத வாக்குவங்கியைத் தக்க வைக்க இயலும்.
என்றாலும், வேறு ஒரு வலுவான கட்சியுடன் கூட்டுச்
சேராமல், பாமகவால் சட்டமன்ற, நாடாளுமன்ற
இடங்களைப் பெற முடியாது.

8) மதிமுகவுக்கு இனி மீட்சி இல்லை. அரசியல்
துறவறம் அக்கட்சியை வா வா என வரவேற்கிறது.

9) கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழிவில்லை. தொடர்ந்து
தனியாக நின்று 0.5 சதம் வாக்குகளைப் பெற்று
இறுதி மூச்சை விட்டு விடாமல் பிடித்து வைத்துக்
கொண்டிருப்பார்கள்.

10) இதுதான் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலின்
மிக்கது தெளிவான ஒரே சித்திரம்.
*********************************************************************
நாம் தமிழர் கட்சியைப் பரிசீலனைக்கு எடுத்துக்
கொள்ள இயலாது. காரணம், இந்த சட்டமன்றத்
தேர்தலில்தான் (2916 மே ) அக்கட்சி முதன்முதலில்
போட்டியிட்டது. மேலும் அது one man party. எனவே
அது பொருட்படுத்தத் தக்கதாக இன்று இல்லை.
நாளையும் பொருட்படுத்தத் தக்க கட்சியாக
உருவாவதற்கு வழியில்லை. 

இக்கட்டுரை பள்ளி மாணவர்களின் ரேங்க் பட்டியல்
அல்ல. இது alternate politics பற்றியது. காங்கிரஸ் காலாவதி
ஆகி 50 ஆண்டுகள் நிறுவடைகின்றன. திராவிட
அரசியலுக்கும் முன், தோற்று அழிந்து போய், திராவிட
அரசியலை அண்டிப் பிழைக்கும் கட்சியாக மட்டுமே
காங்கிரஸ் இருக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சி
திராவிட அரசியலுக்கு மாற்றாக (asanalternate) வருவது
என்பது கிழவி மீண்டும் சமைந்தாள் என்பதைப்
போன்றதே.  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக