திங்கள், 28 நவம்பர், 2016

தோழர் ராஜனின் படுகொலை நெருக்கடி நிலைக்
கொடுமையின் உச்சம்!
----------------------------------------------------------------------------------------
அச்சுத மேனன் கம்யூனிஸ்ட் (CPI) கட்சியைச்
சேர்ந்தவர். இவர் 1970-1977 காலக்கட்டத்தில்
முதல்வராக இருந்தார். அச்சுதானந்தன் மார்க்சிஸ்ட்
(CPM) கட்சியைச் சேர்ந்தவர். இவர் முதல்வராக
இருந்தது அண்மைக்கால வரலாறு. அச்சுதமேனன்
வேறு; அச்சுதானந்தன் வேறு.
**
காங்கிரசின் கருணாகரன் முதல்வராக இருந்தது
1981-87 காலக் கட்டத்தில். தோழர் ராஜனின் படுகொலை
கருணாகரன் முதல்வராகும் முன்பே நடந்த ஒன்று.
அது அச்சுத மேனன் முதல்வராக இருந்தபோது
நடந்தது. அதாவது நெருக்கடி நிலையின்போது
(emergency) நடந்தது. நெருக்கடி நிலையின் பின்னர்,
இந்திய நீதிமன்றங்களில் முதன் முதலில் போடப்பட்ட
ஹேபியஸ் கார்ப்பஸ் வழக்கு ராஜனின் தந்தையால்
போடப்பட்டது. நெருக்கடி நிலையின் போது
உயிர் வாழும் உரிமை கிடையாது; ஹேபியஸ்
கார்ப்பஸ் மனு தாக்கல் செய்ய முடியாது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக