1) ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள் தடய அறிவியல்
நிபுணர் சந்திரசேகர் மூலம் ஆங்கில இந்து ஏட்டுக்கு
கிடைத்தன. அவர்கள் சிவராசன் ஒரு பத்திரிகையாளராகத்
தோற்றம் அளித்ததால், அவரைத் தவிர்த்து விட்டு,
மற்றவர்களை வெளியிட்டனர். அதில் சந்தன மாலையுடன்
தாணு என்ற பெண் நிற்பது வெளியானது.
2) ஹரிபாபுவிற்குத்தான் கலைஞரும் வைகோவும் நன்றி
சொல்ல வேண்டும். ஹரிபாபுவின் புகைப்படங்கள்
வெளியாகாவிட்டால், கண்டிப்பாக கலைஞரும்
வைகோவும் கைது செய்யப்பட்டு இருப்பார்கள்.
3) நான்கு எம்.பி.க்கள் ராஜிவ் கொலை வழக்கில்
கலைஞரைக் கைது செய்ய வேண்டும் என்று
டில்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்கள்.
அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். இது பற்றியெல்லாம்
ஏற்கனவே எழுதி உள்ளேன்.
வைகோ அப்போது ( 1991) திமுகவில்தான் இருந்தார்
என்பதும் அவரின் பெயர் வை கோபால்சாமி
என்பதும் கருத்தில் கொள்ளத் தக்கவை.
ரகோத்தமன் வெகுகாலம் கழித்து புத்தகம் எழுதினார்.
நான் அதில் இருந்து சொல்லவில்லை. 1991 மே மாதம்
முதல் வெளியான தமிழ், ஆங்கில ஏடுகளில் வெளியான,
நான் படித்து என் நினைவில் பசுமையாக உறைந்து
போன செய்திகளில் இருந்து எழுதுகிறேன்.
குறைத்துச் சொன்னதாக நானும் கருதவில்லை.
பேச வேண்டிய காலத்தில் எல்லாம் மௌனமாக
இருந்து விட்டு, காலம் கடந்து புத்தகம் எழுதியவர்
ரகோத்தமன். அதில் நிறைய உண்மைகளைத் திரித்து
எழுதிய யோக்கிய சிகாமணி அவர். உண்மையில் அந்தப்
புத்தகத்தை எழுதியவர் பா ராகவன் அவர்களே.
இவருக்கு ஒரு வரி கூட எழுதத் தெரியாது.
ரகோத்தமனுக்கு எழுதத் தெரியாது என்பது
நாடறிந்த உண்மை. அவர் சொல்லச் சொல்ல,
பா ராகவன் எழுதியது அது என்பதும் எழுத்துலகம்
அறிந்த ஒன்றே.
அதேபோல் திருச்சி வேலுச்சாமிக்கும் எழுதத் தெரியாது.
அவர் சொல்லச் சொல்ல ஒரு பத்திரிகையாளர்
எழுதியதுதான் வேலுச்சாமியின் பெயறில் வந்த புத்தகம்.
ரகோத்தமன் பொய்யாய் எழுதி வாழப்பாடி ராமமூர்த்தியை,
மரகதம் சந்திரசேகரைக் காப்பாற்றினார்.
ஆம், உண்மையே. நளினி எழுதிய புத்தகம் என்பது
அவர் சொல்லச் சொல்ல ஒரு பத்திரிகையாளர்
எழுதியதுதான். நிற்க. எவ்வளவு காசு தெரியுமா?
நான் புத்தகத்தின் விலையைத் தான் கேட்டேன்
என்று முருகன் கோயிலில் சத்தியம் செய்கிறேன்.
கற்பூரத்துடன் வடபழனி முருகன் கோவிலுக்கு
நேரில் வரவும்.
நளினி, முருகனை ஆதரித்து எழுதி, காசு பார்ப்பதை
விடுத்து, உண்மையை எழுதிக் கொண்டு
இருக்கிறீர்களே, மூளையைப் பயன்படுத்தி ஆதாயம்
அடையப் பாருங்கள். நாங்கள்தான் நஷ்டத்திலேயே
வாழ்ந்து விட்டோம். நீங்களாவது புத்திசாலித் தனமாக
பிழைக்கப் பாருங்கள். நன்றி, வணக்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக