வியாழன், 24 நவம்பர், 2016

டாக்டர் மன்மோகன்சிங்கின் உரையில் உள்ள
அரசியல் தாக்குதல்களைத் தவிர்த்து விட்டுப்
பார்த்தால், அவரின் உரையின் சாராம்சம் இதுதான்.
---------------------------------------------------------------------------------------------
1) GDP இரண்டு சதவீதம் குறையும்.
2) இந்த நடவடிக்கையின் நோக்கம் வரவேற்கத் தக்கது.
3) இதன் காரணமாக, பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு
பணம் கிடைப்பது தடுக்கப் படுகிறது.
4) எனவே இதன் செயலாக்கத்தால் மக்களுக்கு ஏற்படும்
கஷ்டங்களைக் குறைக்க பிரதமர் முன்வர வேண்டும். 

அவர் கூறியதில் 2, 4 ஆகிய அம்சங்களில் எவருக்கும்
மாற்றுக் கருத்து இல்லை. 4ஆவது அம்சம் பிரதமருக்கான
அறிவுறுத்தல். இதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டு,
மக்களின் சிரமங்களைக் குறைக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

2ஆவது அம்சம் எனக்குப் புரியவில்லை. அவர் கூறியபடி,
GDP இரண்டு சதம் குறையும் என்றால், அது நிச்சயமாக
பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும். ஆனால்
எவ்வாறு GDP இரண்டு சதம் குறையும் என்பதை அவர்
விளக்கி இருக்க வேண்டும். அவர் அதைச் செய்யவில்லை.
அவர் சார்பில், காங்கிரசின் பொருளாதார நிபுணர்கள்
விளக்க வேண்டும். ஆனால், இதுவரை காங்கிரஸ்
தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை.

அடுத்து, GDP இரண்டு சதம் குறையும் என்ற
மன்மோகனின் கருத்தை, இந்த நிமிடம் வரை
பாஜக தரப்பு மறுக்கவில்லை. நானறிந்த வரையில்
அருண் ஜேட்லியும் மறுக்கவில்லை.
**
இதுதான் இந்தியா. காங்கிரசில் பொருளாதார நிபுணர்கள்
ஏராளம். ஆனாலும் விளக்கம் வரவில்லை. பாஜக தரப்பில்
இருந்து மறுப்பும் வரவில்லை. மக்கள் முட்டாள்கள்
என்று கருதுவதால், இவ்விரு கட்சிகளும் எவ்வித
விளக்கத்தையும் அளிக்க முன்வரவில்லை.
மக்களும் எருமை மாட்டின் மீது மழை பெய்தது
போலத்தானே இருக்கிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக