சனி, 19 நவம்பர், 2016

ரூ 500 ரூ 1000 நோட்டுக்கள் செல்லாது!
புதிய ரூ 2000 நோட்டு சாயம் போகுமா?
வின் தொலைக்காட்சியில் விவாதம்!
-----------------------------------------------------------------------
நாள்: 18.11.2016 இரவு 8.30 to 9.30 மணி
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு!
புதிய ரூ 2000 நோட்டு சாயம் போகிறது என்று
நிகழ்ச்சியின் நடுவே  பரிசோதனையின் மூலம்
நியூட்டன் அறிவியல் மன்றம் நிரூபித்தது!
இதன் யூடியூப் காணொளி நாளை வெளியாகும்.
விரும்புவோர் காணலாம்.
***************************************************************

கறுப்புப் பணம், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற
அறிவிப்பு, அதன் பின்விளைவுகள் என்ற பொருளில்
நிகழ்ந்த விவாதம் அது. அதில் மக்களின் ஐயமான
புதிய ரூ 2000 நோட்டு சாயம் போகுமா என்ற கேள்விக்கும்
பரிசோதனை மூலம் விடையளித்தது நியூட்டன்
அறிவியல் மன்றம். சாயம் போகிறது என்பதை
காமிரா வெளிச்சத்தில் அத்தனை பேரும் பார்க்க
வசதியாக நேரடியாக நிரூபித்துக் காட்டியது
நியூட்டன் அறிவியல் மன்றம்.
பின்குறிப்பு: சாயம் போனால் மட்டுமே அது
உண்மையான நோட்டு. ஏனெனில் அத்தகைய
தொழில்நுட்பம் கொண்டது அது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக