புதன், 16 நவம்பர், 2016

write off என்றால் என்ன?
----------------------------------------
ஒரு வங்கியின் மிக முக்கியமான ஆவணம் பாலன்ஸ் ஷீட்
ஆகும். இது ரகசியமானது அல்ல. இது பொதுமக்களுக்கும்
தெரியப் படுத்தப்பட வேண்டும் என்பது விதி. பாலன்ஸ் ஷீட்
என்பது வழிகாட்டும் ஆவணமும் ஆகும் (guiding).
**
வருடாந்திர பாலன்ஸ் ஷீட்டில், வாராக்கடன் (NPA)
காட்டப் படாது. அதாவது, வாராக் கடன் WRITE OFF
செய்யப்பட்டு வேறு ஒரு இனத்தின் கீழ், AUCA என்ற இனத்தில் காட்டப்படும். (AUCA = Advance Under Collection Account)
**
ஏன் பாலன்ஸ் ஷீட்டில் NPA காட்டப் படுவதில்லை?
NPA என்பது asset தான் என்றாலும், யதார்த்தத்தில்
அது வாராக் கடனாக இருக்கிறது. அதாவது வரவு
பூஜ்யம் ஆகும். அதாவது  மெய்ந்நிலையில் அது asset அல்ல.
எனவே asset அல்லாத ஒன்றை, asset என்ற வகையினத்தில்
காட்டுதல் கூடாது. அது தவறு. அது misleading செய்துவிடும்.
**
ஆகவே, வாராக்கடனான NPA, write off செய்யப் படுகிறது.
அப்போதுதான்அது பாலன்ஸ் ஷீட்டில் இடம் பெறாமல்
இருக்கும். எனவே, வாராக்கடனை AUCAவுக்கு அனுப்பி
விடுவார்கள்.
**
ஆக, முற்ற முழுக்க, WRITE OFF என்பது கணக்குவைப்பு
முறையில் உள்ள ஒரு adjustment entry. அவ்வளவே.
**
write off  என்பது தள்ளுபடி (waiver) அல்ல. அதைத்
தள்ளுபடியாகக்  கருதுவது வங்கியியல் மொழி
(banking language) அறியாமால் இருப்பதன் விளைவு.
**
இவ்வாறு write off செய்வதை ரிசர்வ் வங்கி
அனுமதிக்கிறது. ரிசர்வ் வங்கி 2009ஆம் ஆண்டு
முதல் இந்த write off நடைமுறையை அனுமதித்து
உள்ளது. இதற்கான நிபந்தனைகளையும் ரிசர்வ்
வங்கி விதித்து உள்ளது.
**
write off செய்யும் வங்கிகள், PCR எனப்படும் Provision Coverage
Ratioஐ பராமரிக்க வேண்டும். இது வாராக்கடன்களுக்கு
ஈடாக வங்கிகள் வைத்திருக்க வேண்டிய தொகை.
**
சுருங்கக் கூறின், write off  என்பது ஒரு technical matterதானே
தவிர, கடன் தள்ளுபடி அல்ல. கடன் தள்ளுபடி என்பது
மிகப்பெரிய policy decision ஆகும். இதை வங்கியின்
ஆடிட்டர் மேற்கொள்ள முடியாது. வங்கியின் தலைமை
(board) மேற்கொள்ளும் முடிவு,   
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக