வியாழன், 24 நவம்பர், 2016

வாசகர்களின் கவனத்திற்கான முக்கிய அறிவிப்பு!
---------------------------------------------------------------------------------------------
1) இந்தியாவில் முதலாளியப் பொருளாதாரம் செயல்பட்டு
வருகிறது. இது ஏகாதிபத்திய சார்புப் பொருளாதாரமும்
ஆகும். இதை இந்தியாவின் ஆளும் வர்க்கங்கள்
செயல்படுத்தி வருகின்றன. அரசியல் கட்சிகள்
என்பவை (காங், பாஜக முதலியன) ஆளும் வர்க்கத்தின்
பிரதிநிதிகளே. இன்று ஆட்சியில் இல்லாவிட்டாலும்
காங்கிரஸ் கட்சி இந்திய ஆளும் வர்க்கத்தின் கட்சி
என்பதை மறந்து விடக் கூடாது. டாக்டர் மன்மோகன் சிங்
அவர்களும் ப சிதம்பரம் அவர்களும் இன்று ஆட்சியில்
இல்லாவிட்டாலும், அவர்கள் ஆளும் வர்க்கத்தின்
நம்பகமான பிரதிநிதிகள். இவை அனைத்தும் மார்க்சிய
பால பாடம் ஆகும். நிற்க.
**
நாம் எழுதும் பொருளாதாரக் கட்டுரைகள் வாசகத்
தன்மையில் முதிர்ச்சி அடைந்த, அறிவார்ந்த
வாசகர்களை மனதில் கொண்டு எழுதப் படுபவை.
அவர்களுக்கு ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும்,
மார்க்சிய பால பாட போதனைகளை எழுதிக் காட்ட
வேண்டிய அவசியமில்லை.
**
நுனிப்புல் ஆசாமிகளும், மார்க்சிய பாலபாடம்
அறியாதவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில்
எழுத வேண்டும் என்றால், ஒவ்வொரு கட்டுரையையும்
பத்துப் பக்கத்தில் எழுத வேண்டும். அது இயலாதது.
**
அடுத்து, அநாகரிகமான பின்னூட்டங்கள், வசவுகள்,
அவதூறுகள் ஆகியவற்றுக்கு இங்கு அனுமதியில்லை.
அவ்வாறு பின்னூட்டம் இடுபவர்கள் தண்டிக்கப்
படுவார்கள்.
**
இந்தப் பதிவில் உள்ள கட்டுரையின் முதல் வரியே,
டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் ஒரு முதலாளியப்
பொருளாதார நிபுணர் என்ற வாக்கியத்துடன்
தொடங்குகிறது. இந்த ஒரு வாக்கியமே எல்லாவற்றையும்
புரிய வைக்கும் ஆற்றல் கொண்டது. இதைப் புரிந்து
கொள்ள இயலாதபோது, பிறழ் புரிதல் ஏற்பட்டு
விடும். அது மோசமான பின்னூட்டங்களைப் பிரசவிக்கும்.           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக