புதன், 16 நவம்பர், 2016

பாலன்ஸ் ஷீட் என்பதுதான் வழிகாட்டும் ஆவணம்
(guiding document). அதில் யதார்த்த நிலைமை (actual reality)
பிரதிபலிக்கப் பட வேண்டும். வாராக் கடன்களைப்
பொறுத்த மட்டில், யதார்த்தத்தில் அவை asset அல்ல.
அதாவது அவை பூஜ்யமே. பாலன்ஸ் ஷீட்டில் அவற்றைக்
கொண்டு வருதல் கூடாது. எனவே write off செய்தாக
வேண்டும். இதுதான் well established practice in vouge. எனவேதான்,
AUCA வகையில் அவை இடம் பெறுகின்றன.
**

write off மற்றும் தள்ளுபடி (waiver) என்ன வேறுபாடு?
----------------------------------------------------------------------
WAIVER (தள்ளுபடி) என்பது கொள்கை முடிவு.
மிகவும் சீரியஸான கொள்கை முடிவு (policy decision).
ஆனால், write off என்பது  ஒரு adjustment entry மட்டுமே.
தள்ளுபடி முடிவை வங்கி
நிர்வாகம் மட்டுமே எடுக்க இயலாது. அதற்கு
நிதியமைச்சகத்தின் ஒப்புதல் தேவை. (இங்கு பெருந்தொகையிலான கடனைத் தள்ளுபடி செய்வது
மட்டுமே குறிப்பிடப் படுகிறது.)     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக