வெள்ளி, 18 நவம்பர், 2016

காளையை அதன் கொம்பைப் பிடித்து அடக்குவதற்கு
இந்தியாவில் நாதி இல்லை!
----------------------------------------------------------------------------------------------------
Hold the bull by its horns என்று ஓர் ஆங்கிலத் தொடர்
உண்டு. சிலிர்த்துக் கொண்டு வரும் காளையை
அதன் கொம்பைப் பிடித்து அடக்க வேண்டும் என்று இத்தொடருக்குப் பொருள்.

துரதிருஷ்ட வசமாக, இந்தியாவின் தேசிய அரசியலில்,
அந்த வல்லமை படைத்த எந்தத் தலைவரோ அல்லது
கட்சியோ இல்லை என்பது வெளிப்படை.

சோனியா காந்தி சாய்வு நாற்காலியில் அமர்ந்து
விட்டார். ராகுல் காந்தியை ஒரு challenging leader என்று
குடிபோதையில் இருக்கும் நேரத்தில் கூட,
எவராலும் கருத முடியவில்லை. ஆக, மோடியின்
காட்டில் மழை!

மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட நாடாளுமன்ற இடதுசாரிக்
கட்சிகளிடம் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று
சொல்லும் அளவுக்கு அனைத்தையும் அவர்கள்
இழந்து விட்டார்கள். மார்க்சிஸ்டுகளால் அதிகபட்சமாக
ஓர் அழுத்தக் குழுவாக (pressure group) மட்டுமே செயல்பட
இயலும், அதுவும் நாடாளுமன்றத்தில் போதிய
இடங்களைக் கொண்டிருந்தால். அப்படி ஒரு
பாத்திரத்தை வகிக்கும் ஆற்றலையும் அவர்கள்
இழந்து நாட்கள் ஆகி விட்டன.

கொள்கை ரீதியாக பாஜகவுடன் முரண்பட்ட
கட்சி வேறு எதுவும் இந்தியாவில் இல்லை. (இங்கு
கொள்கை என்பது பொருளாதாரக் கொள்கையை
மட்டுமே குறிக்கும். அடையாள அரசியல் என்பதற்கு
கொள்கை எதுவும் கிடையாது.)

அடையாள அரசியலை வைத்துக் கொண்டு, உலக
மயத்தை, ஏகாதிபத்தியச் சார்பு பொருளியல்
கொள்கைகளை ஒருநாளும் எதிர்க்க முடியாது.
அடையாள அரசியல் என்பது காலாவதி
ஆகிப்போன ஒன்று.

அடையாள அரசியலின் விளைவாக, மோடி எதிர்ப்பு
முகாமில் தத்துவ வறட்சியும் தலைமைப் பஞ்சமும்
நிலவுகின்றன.அறிவார்ந்த சிந்தனை என்பதற்கே
அடையாள அரசியல் எள்ளளவும் இடமளிக்காது.
அறிவின் இடத்தில் வெறுப்பை வைப்பதுதானே
அடையாள அரசியல்!

இங்கு மோடி எதிர்ப்பு என்பது மோடி அரசின்
பொருளியல் கொள்கைகளுக்கான எதிர்ப்பு
என்ற உண்மை ஒருபோதும் எடுபடாது. "மோடி என்ன
பெரிய பூ......." என்று கக்கூஸில் எழுதி விட்டு
ஓடி வருபவன் முழுநேரப் புரட்சியாளன்!  

ஆங்கில இந்து ஏட்டில் இன்று (118.11.2016) வெளியான
"THE MORALITY OF BINARIES" என்ற கட்டுரையில்,
கட்டுரையாளர் திரு ஜி சம்பத் இதையேதான்
கூறுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக
இதையேதான் நான் கூறி வந்துள்ளேன். சுருங்கக்
கூறின், "There is NO binary" என்பதையே கட்டுரையாளர்
நிறுவி இருக்கிறார்.

விரும்புவோர் படிக்கலாம். வாசகர்களிடம் இருந்து
போதிய ஆங்கிலப் புலமையை இக்கட்டுரை
கோருகிறது.
-------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: அடையாள அரசியலால் நீலம் பாரித்துக்
கிடக்கின்ற ஜடத்துவ நிலையை (mental inertia) எய்திய
தமிழ் தேசத்துக் குடிகளிடம் இடக்கரடக்கல்
பயன் தராது என்பதால், தேவையான இடத்தில்
இடக்கரடக்கலைப் பயன்படுத்த இயலவில்லை.
எனவே வாசகர்கள் பொருத்தருளுமாறு வேண்டுகிறேன்.
***********************************************************************

இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும், எந்த ஒரு
மாநிலக் கட்சியும் தனக்கென்று தனித்த ஒரு
பொருளாதாரக் கொள்கையைக்
கொண்டிருக்கவில்லை. மம்தா பானர்ஜியின்
பொருளாதாரக் கொள்கை என்ன? மாயாவதியின்
பொருளாதாரக் கொள்கை என்ன? நவீன் பட்நாயக்
முதல் ஜெயலலிதா வரை இவர்களின் மாநிலக்
கட்சிகளுக்கு தனித்த பொருளாதாரக் கொள்கை
எதுவும் கிடையாது. ஆளும் வர்க்கத்தின்
பொருளாதாரக் கொள்கையை, அவ்வப்போது
ஆதரிப்பார்கள் அல்லது எதிர்ப்பார்கள். அவ்வளவுதான்.
**
GST (சரக்கு மற்றும் சேவை வரி) எப்படி அனைவராலும்
ஆதரிக்கப்பட்டு நிறைவேறியது? திமுக உட்பட
ஆதரித்ததே! கனிமொழி GSTயை ஆதரித்து
வாக்களித்தாரே!  


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக