புதன், 23 நவம்பர், 2016

ரசீது இல்லாமல் ரூ 5 லட்சம் பணம்!
கல்விக்கட்டணமாக (capitation fees) வசூலித்து
ஏமாற்றிய கல்வித்தந்தை துரைமுருகன்!
போலீசில் புகார்! கைது ஆவாரா?
-------------------------------------------------------------------------
மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் ஒரு கல்வித்
தந்தை! இவர் வேலூரில் கிங்ஸ்டன் பொறியியல்
கல்லூரி என்ற சுயநிதிக் கல்லூரியை நடத்தி
வருகிறார். இக்கல்லூரியில், ப்ளஸ் டூ ( 12ஆம் வகுப்பு)
படித்துக் கொண்டிருந்தபோதே முத்துக்குமார்
என்ற மாணவன் பொறியியல் படிப்பில் அட்மிஷன்
கேட்டு, அவனுக்கு ரூ ஐந்து லட்சம் கட்டணத்தில்
இடம் வழங்கப் பட்டது.

ப்ளஸ் டூ முடிவுகள் வந்தன. பையனின் மதிப்பெண்கள்
மிகவும் குறைவு. பொறியியல் படிப்பிற்கு அரசு
நிர்ணயித்துள்ள மதிப்பெண்களை இம்மாணவன்
பெறவில்லை. எனவே அவன் பொறியியல் படிப்பிற்குத்
தகுதியற்றவன்  ( not eligible) ஆனான்.

பணத்தைத் திருப்பிக் கேட்டான். இன்றுவரை கல்வித்
தந்தை திருப்பித்  தரவில்லை. போலீசில் புகார்
கொடுத்துள்ளனர் மாணவன் பெற்றோர்.

கல்வித் தந்தை துரைமுருகன் அவர்கள் திமுக
நடத்தும் கருப்புப்பண போராட்டத்தில் இன்று
பங்கேற்கிறார். ரசீது கொடுக்காமல் அவர் வாங்கிய
கருப்புப்பணத்தை எப்படிக் கைப்பற்றுவது?

ஜெயலலிதாவை, பார்ப்பனீயத்தை சகிக்க முடியாது
என்ற ஒரே காரணத்திற்காக, திமுகவை பலரும்
ஆதரிக்கின்றனர். அதற்காக கல்வித்தந்தை
துரைமுருகனின் கறுப்புப் பணத்தையும், கேடி
பிரதர்ஸின் கறுப்புப் பணத்தையும் ஆதரிக்க
வேண்டிய அவசியமில்லை!
--------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக