திங்கள், 21 நவம்பர், 2016

மோடி என்ன பெரிய அப்பாடக்கரா?
மானங்கெட்ட மோடியே ராஜினாமா செய்!
--------------------------------------------------------------------------------
சனிக்கிழமை காலை (19.11.2016) இழவெடுத்தது
மாதிரி விடிந்தது. கல்வித் தந்தை ஜேப்பியார்
அவர்களின் செயின்ட் ஜோசப் பொறியியல்
கல்லூரியில் வருமானவரித்துறை ரெய்டு செய்து
ரூபாய் எட்டுக் கோடியை கையும் களவுமாகப்
பிடித்தது.

இது மிகப்பெரிய அநியாயம் என்று நாடு முழுவதும்
உள்ள முற்போக்குகள் கண்டனம் தெரிவித்தனர்.
பெருமதிப்பிற்குரிய கல்வித்தந்தை ஜேப்பியார்
அவர்கள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்
என்பதால், இந்த ரெய்டு நடந்துள்ளது என்று
நாடு முழுவதும் உள்ள முற்போக்குகள் மோடி அரசின்
மீது காரித் துப்பினர்.

இன்று திங்கள் கிழமை (21.11.2016) மீண்டும் இழவெடுத்தார்
மோடி. மற்றுமொரு கல்வித்தந்தை பாரிவேந்தர்
அவர்களின் உதவியாளரான வேந்தர் மூவீஸ் மதன்
அவர்கள்  திருப்பூரில் கைது செய்யப் பட்டார்.

மரியாதைக்குரிய மதன் அவர்கள் தம்முடைய மனைவி
அந்தஸ்தில் உள்ள ஒரு பெண்ணுடன் தனியறையில்
இருந்தபோது அவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும்.
மோடி அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கை
சர்வதேசப் பத்திரிகைகள் கண்டிக்கின்றன.
சர்வதேச அளவில் மோடியின் மானம் சந்தி
சிரிக்கிறது.

கல்வித்தந்தை பாரிவேந்தர் அவர்கள், அவரின் புதல்வர்
ரவி பச்சமுத்து அவர்கள், கல்வித் தந்தையின்
உதவியாளர் மரியாதைக்குரிய மதன் அவர்கள்
ஆகிய அனைவருமே,  கல்வி மறுக்கப்பட்ட, ஏழை
எளிய  சூத்திரக் குடும்பத்துப் பிள்ளைகளை
டாக்டராகவும் என்ஜீனியராகவும் ஆக்கி அழகு
பார்க்கிறவர்கள்.

துணி வெளுப்பவன் மகன் துணிதான்  வெளுக்க
வேண்டும் என்ற நிலையை மாற்றி, துணி வெளுப்பவன்
மகனை டாக்டராக்கி அழகு பார்ப்பவர் பாரிவேந்தர்.
சவரம் செய்பவன் மகனை இன்ஜீனியராக்கி
அழகு பார்த்தவர் ஜேப்பியார்.

மோடி தன்னை ஒரு பெரிய அப்பாடக்கராக
நினைத்துக் கொண்டு, கல்வித் தந்தைகள்
மீது நடவடிக்கை எடுப்பது வன்மையான
கண்டனத்துக்கு உரியது. எனவே கல்வித்
தந்தைகள் மீது கைவைத்த மோடி உடனடியாக
ராஜினாமா செய்ய வேண்டும். இதுவே இந்த நாடு
முழுவதும் உள்ள முற்போக்குகளின் கருத்து.

குலக்கல்வி ஒழிக!
கல்வித் தந்தைகள் வாழ்க!
---------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: மூன்றாவது கல்வித் தந்தை அருள்மிகு
பங்காரு அடிகளார் அவர்கள் ரூ 700 கோடி கறுப்புப்
பணத்தை வைத்துக் கொண்டு சிரமப் படுகிறார்.
ரிசர்வ் வாங்கி கவர்னர் இதில் கவனம் செலுத்தி,
அடிகளாருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
**********************************************************  
கல்வித் தந்தைகள் கைது செய்யப் படுவதன்
காரணமாக, நாடு முழுவதும் உள்ள பெற்றோர்கள்
அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். இது
கல்வித்துறையில்  மோடி அரசு பிறப்பித்த ஒரு
நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) என்று முற்போக்குகள்
கருதுகின்றனர். கல்வித் துறையே ஸ்தம்பித்துப்போய்
உள்ளது. மோடியின் நாட்கள் எண்ணப் படுகின்றன.

திரு சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு,
தயிர்சாதக் கண்ணோட்டத்தை வைத்துக் கொண்டு
அரசியல் விவாதங்களில் ஈடுபடக் கூடாது. அரசியல்
விவாதங்களில் ஈடுபடுவது என்று முடிவு செய்துவிட்டால்,
அதற்கேற்ற இரும்புக் கண்ணோட்டம் தேவை. அத்தகைய
கண்ணோட்டம் தங்களிடம் இருக்குமானால், தாங்கள்
யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவை
இருக்காது.

வளர்ச்சிக்கான பாதை என்பது நேர்கோட்டுப்பாதை அல்ல.
முன்சென்றும் பின்னடைந்தும்தான் பாதையைக்
கடக்க முடியும். உலக அளவிலும், உள்நாட்டு அளவிலும்
வேகமான மாற்றங்கள் நிகழ்ந்து வரும் இத்தருணத்தில்
எந்தவொரு சீர்திருத்தத்தின் விளைவும் ஏழாண்டுகள்
மட்டுமே நீடிக்க இயலும். நிற்க.
**
1) இதுவரை வரி செலுத்தாதவர்கள் இனிமேல் செலுத்தியே
ஆக வேண்டும். இதற்கான பிடி இறுகி விட்டது. இதன்
மூலம் வரி செலுத்துவோர் எண்ணிக்கை கோடிக்கணக்கில்
அதிகரிக்கும். இவ்வாறு அதிகரித்த எண்ணிக்கை
ஒருபோதும் குறையாது என்பது மட்டுமே இந்த
நடவடிக்கையின் ஒரே சிறப்பு அம்சம்.
2) அச்சடித்து வெளியிடப்பட்ட பணத்தில் ஒரு பகுதி
வங்கிகளுக்குத் திரும்ப வராது. அதுதான் கறுப்புப்
பணம். வங்கியில் பதிவு செய்வதற்கு அருகதையற்ற
அப்பணம் வீணாய்ப்போகும். இது எவ்வளவு என்பது
டிசம்பர் 31 அன்று தெரிந்து விடும்.
3) இந்திய அரசு அச்சடிக்காத பண நோட்டுகள் யாவும்
அறிவித்த அன்றே இறந்து விட்டன.
இம்மூன்றும்தாம் இந்த நடவடிக்கையின் கண்கண்ட
பலன்கள் (substantial gains).
4) இதன் மூலம் முதலாளியப் பொருளாதாரம் தன்னைச்
சீர்செய்து கொள்கிறது.(rectified). அவ்வளவுதான். இது மிகவும்
இயற்கையான ஒன்று. Demonetisation is a defensive mechanism
which was activated by the system (govt).        
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக