வியாழன், 24 நவம்பர், 2016

பொருளாதார நிபுணரின் அரசியல் பேச்சு!
------------------------------------------------------------------------------
டாக்டர் மன்மோகன் சிங் முதலாளியப் பொருளாதார
நிபுணர். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலையில் உள்ள
செயின்ட் ஜான் கல்லூரியில் பொருளாதாரம் பயின்று
டாக்டர் பட்டம் பெற்றவர். தற்போது கல்லூரிப்
பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

கேம்பிரிட்ஜில் படித்த டாக்டர் மன்மோகன்சிங் இந்தியப்
பிரதமர் ஆனதும், அவரைக் கவுரவிக்கும் பொருட்டு,
கேம்பிரிட்ஜ் பல்கலையானது ஒரு ஸ்காலர்ஷிப்பை
அறிவித்தது. ஆண்டுதோறும் ஒரு இந்திய மாணவருக்கு
பிஹெச்டி படிப்பதற்கான அனைத்துச் செலவுகளையும்
(உணவு தங்குமிடம் உட்பட) கேம்பிரிட்ஜ் பல்கலை
ஏற்கும் என்பதே அந்த ஸ்காலர்ஷிப்.

இன்றும் அந்த ஸ்காலர்ஷிப் வழங்கப் பட்டுக்
கொண்டிருக்கிறது. இது குறித்து நியூட்டன் அறிவியல்
மன்றம் முன்பே பலமுறை எழுதியுள்ளது.

ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு (demonetisation) குறித்து,
எதிர்க்கட்சிகளின் சார்பில் உரையாற்றுமாறு
டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு நிதியமைச்சர்
அருண் ஜேட்லி அழைப்பு விடுத்திருந்தார். மன்மோகன்
அவர்களும் அவரின் அழைப்பை ஏற்று
மாநிலங்களவையில் உரையாற்றினார்.

ஏழு நிமிட ஆங்கில உரை அது. மிகுந்த ஆவலுடன்
அந்த உரையைக் கேட்டேன். எனினும் ஒரு பொருளாதார
நிபுணரின் உரை அல்ல அது; மாறாக அது ஒரு
அரசியல்வாதியின் உரை, The politician in Manmohan Singh only
spoke and the economist did not.

இந்திய நாடாளுமன்றத்தில் வெகு அபூர்வமாகத்தான்
சிறந்த உரைகளைக் கேட்க முடியும். இதற்கு முன்பு
நிகழ்த்தப்பட்ட சிறந்த உரை முன்னாள் நிதியமைச்சர்
ப சிதம்பரம் அவர்கள் சரக்கு மற்றும் சேவை வரி
குறித்து (GST) ஆற்றிய உரை. அதற்கப்புறம் இன்று
வரை நிபுணத்துவம் வாய்ந்த சிறந்த உரை எதுவும்
ஆற்றப்படவில்லை. சிறந்த உரையை ஆற்றியிருக்க
வேண்டிய டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்
அரசியல்வாதியாகச் சுருங்கிக் கொண்டது
ஏமாற்றத்தைத் தந்தது. 

இருப்பினும் இக்குறையை ப சிதம்பரம் அவர்களால்
போக்க முடியும். ஆனால் ப சிதம்பரம் பேசிப்
பெயர் வாங்குவதை ராகுல் காந்தி விரும்பாத
காரணத்தால், ப சிதம்பரம் அவர்கள் பேசுவதற்கு
வாய்ப்பில்லை என்றே தெரிய வருகிறது.

பூலான் தேவியும் மு.க அழகிரியும் அலங்கரித்த
இந்திய நாடாளுமன்றத்தில் டாக்டர் மன்மோகன்
சிங்கும் ப சிதம்பரமும் இடம் பெற்றது ஒன்றே
போதுமானது என்று மனநிறைவு அடையலாம்.
---------------------------------------------------------------------------------------------
யாரடா நீ, பால் ராபின்சன், புழுவினும் கீழான ஈனப்
பயலே, உன் மரமண்டையில் பொருளாதாரம் ஏறாது.
எங்கு வந்து என்ன பேசுகிறாய்? கக்கூஸில் எழுதுகிற நாயே.
கழுத்துக்கு மேல் தலை இருக்க வேண்டும் என்றால் ஓடிப்போ,
பிணமே, you pimp.

------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக