ஜெயமோகனின் கழிப்பறைக்குள் ஒளிந்து இருப்பவர்கள்!
------------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
--------------------------------------------------------------------------------------------
மோடியின் ஆட்சியில் நிலவும் சகிப்பின்மையைக்
கண்டித்து நாடு முழுவதும் எழுத்தாளர்கள் சாகித்ய
விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது ஒரு புறம்,
"உலகமே அழிந்தாலும் சரி, நாங்கள்
விருதுகளைத் திருப்பிக் கொடுக்க மாட்டோம்" என்று
இழிவின் எல்லையைத் தொட்டு நிற்கும் தமிழக இடதுசாரிகள்
மறுபுறம். இந்நிலையில் ஜெயமோகன் தமக்கு வழங்கப்பட
இருந்த பத்மஸ்ரீ விருதை மறுத்து இருப்பது ஒரு ஒளிக்கீற்றே.
எனது மறுப்பு ஓர் அரசியல் செயல்பாடல்ல என்று
ஜெயமோகன் தெளிவுறுத்தி உள்ளார். எனினும் விருதைத்
துறக்க எந்த ஒரு தமிழ் எழுத்தாளருமே முன்வராத நிலையில்
ஜெயமோகன் முன் வந்தது பெரிதினும் பெரிது ஆகும்.
இந்த மனத்திண்மை வேறு எந்தத் தமிழ் எழுத்தாளருக்கும்
வரவில்லை என்பதுதானே உண்மை.
எழுத்தாளர்களுக்கு என்று சங்கம் வைத்து இருப்பவர்கள்,
தமிழக இடதுசாரிகள். CPI தோழர்கள் கலை இலக்கியப்
பெருமன்றத்தையும், CPM தோழர்கள் தமுஎகச என்ற
அமைப்பையும் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சாகித்ய
விருதுகளை அதிகம் பெற்றுள்ளவர்களும் இடதுசாரிகளே.
ஜெயகாந்தன், மேலாண்மை பொன்னுச்சாமி, வெங்கடேசன்
என்று பட்டியல் நீள்கிறது.
என்றாலும் தாங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக,
தாங்கள் பெற்ற விருதுகளைத் துறக்க இன்று வரை
இந்த இடதுசாரிகள் முன்வரவில்லை. மிகக் கடுமையான
புறவய நிர்ப்பந்தம் இருந்த போதும் இவர்களில் ஒருவரேனும்
விருதுகளைத் துறக்கவோ, துறக்காதது குறித்து நாணவோ
முன்வரவில்லை.
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது (உ)டைத்து.
பெரியாரியல், திராவிட இயல் சித்தாந்தப் பின்புலம்
உடைய கவிப்பேரரசு வைரமுத்து, கவிக்கோ அப்துல்
ரகுமான் போன்றோரும் விருதைத் துறக்க விரும்பவில்லை.
அரசியல் இயக்கங்களைச் சாராத நாஞ்சில் நாடன்,
திலகவதி போன்றோரும் அப்படியே. சாகித்ய அகாடமியில்
தேர்வுக்குழு உறுப்பினர் என்ற உயர்ந்த பதவியில் இருக்கும்
பெண்ணிய தலித்திய எழுத்தாளர் பாமாவும்
சகிப்பின்மையைக் கண்டித்து பதவி விலகத் தயாராக
இல்லை.
இவ்வளவுக்கும் விருதுகளைத் துறக்க வேண்டும் என்று
இவர்களின் மீது நிர்ப்பந்தங்கள் கடுமையாக இருந்தன.
விருதைத் துறக்க மனமில்லாத கவிக்கோவைக் கண்டித்து
ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள்ஆர்ப்பாட்டம் கூட நடத்தின.
ஆக, பெண்ணியம், தலித்தியம், பெரியாரியம், மார்க்சியம்
என்று பல்வேறு சித்தாந்தப் பின்னணி கொண்ட
எழுத்தாளர்களில் ஒருவர்கூட விருதுகளைத் துறக்காத
நிலையில், வலதுசாரி முகாமைச் சேர்ந்த ஜெயமோகன்
பத்மஸ்ரீவிருதை ஏற்க மறுத்திருப்பது தமிழ் இலக்கியச்
சூழலில் பெரிதும் கவனம் ஈர்க்கிறது.
குறிப்பாக, CPI, CPM கட்சிகளின் எழுத்தாளர் சங்கங்கள்
கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. திலகவதி,
வைரமுத்து போன்றோர் தாங்கள் விருதுகளைத் திருப்பிக்
கொடுக்கப் போவதில்லை என்று கூறியதுடன் அதற்கான
காரணங்களையும் கூறி இருக்கிறார்கள்.
ஆனால் விருது பெற்ற கல்லுளிமங்கர்களான
போலி இடதுசாரிகள் தாங்கள் ஏன் விருதுகளைத்
திருப்பிக் கொடுக்கவில்லை என்பதற்கான காரணத்தைக்
கூடக் கூறவில்லை.
அமைப்பு சாராமல் உதிரியாக இருக்கும் ஒரு போலி
இடதுசாரி எழுத்தாளர் ஜெயமோகனின் கழிப்பறைக்குள்
ஒளிந்து கொண்டு, ஜெயமோகனின் குதம் வழியாக
வெளியேறும் அபான வாயுவை ஒரு பலூனில் பிடித்துத்
தம் மூக்கில் பொருத்திக் கொண்டு நாற்றம் தாங்கலையே
என்று ஓலமிடுகிறார்.
இன்னொரு போலி, வெளிநாட்டில் இருந்து கொண்டு,
ஜெயமோகனை வைது மணிக்கொரு பதிவை
முகநூலில் ஏற்றித் தொடர்ச்சியாக சுயஇன்பம்
மேற்கொண்டு வருகிறது. "நான் ஒரு பின்நவீனத்துவக்
கழிசடை அல்ல" என்று சொல்லி முதுகுத் தோலைக்
காப்பாற்றிக் கொண்டே, பின்நவீனத்துவக் கழிவுகளை
எழுத்தில் வடித்து தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையைச்
சிதைக்கும் அற்பப் போலி இது.
இறுதிப் பரிசீலனையில், தமது செய்கை மூலம் ஒட்டு
மொத்தப் போலி இடதுசாரிகளின் முகத்தில் ஜெயமோகன்
காரித் துப்பி உள்ளார் என்பதே நிதரிசனம்.
பாம்பையும் போலிக் கம்யூனிஸ்ட்டையும் கண்டால்
பாம்பை விட்டு விடு; போலிக் கம்யூனிஸ்ட்டை அடி.
*******************************************************
இவ்வளவுக்கும் ஜெயமோகன் மக்கள் சார்ந்து எழுதும்
இடதுசாரி எழுத்தாளர் அல்லர். நன்கு அறியப்பட்ட
வலதுசாரி எழுத்தாளரே அவர். மாற்று முகாமைச்
சேர்ந்தவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு
ஓர் அற்புதமான அளவுகோலை அறிஞர் அண்ணா
தமிழ் உலகிற்குத் தந்துள்ளார். மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மணம் உண்டு என்பதே அது.
மாற்றான் தோட்டத்து மல்லிகையான ஜெயமோகன்