செவ்வாய், 12 ஜனவரி, 2016

உழவு மாடு, புணயல் மாடு, வண்டி மாடு என்று நடைமுறையில்
மாடுகளை,  வேலைப் பிரிவினையின் அடிப்படையில்
பகுப்பது உண்டு. உழவு மாடு வயலில் ஏர் உழும். புணயல் மாடு,
சூடடிப்பின் போது.... அதாவது  அறுவடை முடிந்த பிறகு,
வைக்கோலில் ஒட்டி இருக்கும் நெல்லைப் பிரித்து எடுக்கும்
வேலையில் பயன்படும். பெரும்பாலும் வயதான மாடுகளையே
இதில் உழவர்கள் பயன்படுத்துவார்கள்.  புணயல் மாட்டை
வண்டியில் பூட்டினால் அது வட்ட வடிவமாகச் சுற்றி வர முயலும்.
காரணம் பழக்க தோஷம். புணயல் அடிக்கும்போது வட்டமாகச்
சுற்றி வரும் பழக்கம்.
**
வண்டி மாடு என்பது சவாரிக்குப் பயன்படும் மாடு. இதில்
வலவன் காளையை வலப்புறமும், இடவன் காளையை
இடப்புறமும் பூட்ட வேண்டும். ஒரு அவசரத்துக்கு
யாரிடமாவது மாட்டை இரவல் வாங்கினால், வலவன் காளை
எது இடவன் காளை  எது என்று கேட்டுத் தெரிந்து கொண்டுதான்
வாங்குவார்கள். கொடுப்பவர்களும் சொல்லி விடுவார்கள்.
**
மாடுகளோடு பழகாத எவரும் இந்த விஷயத்தில் எதிராகக்
கருத்துச் சொல்லும் உரிமை கிடையாது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக