செவ்வாய், 5 ஜனவரி, 2016

ஜட்டியும் ஜனாதிபதியும்!
----------------------------------------
1970களில் ஒருநாள். பேச்சிலராக சென்னை விடுதியில்
வாழ்ந்த காலம். (பேச்சிலர் என்பது ஆங்கிலச் சொல்.
அதற்கு நிகராகத் தமிழில் வழங்கி வரும் பிரம்மச்சாரியும்
தமிழ் அல்ல). மேலும் ஹாஸ்டல், லாட்ஜ் என்ற இரண்டு
ஆங்கிலச் சொற்களுக்கும் நாசமாய்ப்போன தமிழில்
விடுதிதான். இங்கு விடுதி என்று நான் குறிப்பிட்டது
லாட்ஜ்தான்.

அறை நண்பன் ஒருவனைக் கூப்பிட்டேன். பிரசிடென்ட்
ஆப் இந்தியாவைத் துவைத்துக் கொண்டு இருக்கிறேன்
என்று பதில் சொன்னான்.(இங்கு அறை நண்பன் என்ற
சொல்லை room mate என்ற ஆங்கிலச் சொல்லுக்கு,
குத்து மதிப்பான தமிழாகப்  பயன்படுத்துகிறேன்.
 room mateக்குச் சரியான தமிழ் இல்லை) 

சரி, விஷயத்துக்கு வருவோம். மன்னிக்கவும்,
விடயத்துக்கு வருவோம். நண்பன் துவைத்துக்
கொண்டு இருந்தது அவனுடைய ஜட்டி. அன்று
இந்தியாவின் ஜனாதிபதியாக (பொறுப்பு) பி.டி ஜட்டி
இருந்தார். எனவே ஜனாதிபதியைத் துவைத்துக்
கொண்டு இருக்கிறேன் என்றால், ஜட்டியைத் துவைத்துக்
கொண்டு இருக்கிறேன் என்று பொருள்.

முந்திய வாக்கியத்தில் பி.டி ஜட்டி என்று எழுதி
இருக்கிறேன். இதை ஆங்கிலத்தில் எழுதுமாறு
வேண்டுகிறேன். அதாவது அந்தப் பெயரை மட்டும்.

1) P T JATTI 2) B D JATTI 3) B T JATTI 4) P D JATTI
இப்படி நாலு விதமாக எழுதலாம். இதில் B D JATTI
என்றபது மட்டும்தான் சரி. மற்ற மூன்றும் தப்பு.
இதில் இருந்து என்ன தெரிகிறது?

தமிழில் ஒரு வாக்கியம் கூட ஒழுங்காக எழுத முடியாது
என்பதுதான். இதை நான் இப்பதிவில் நிரூபித்துள்ளேன்.
-----------------------------------------------------------------------------------------------
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக