அணுக்கழிவின் கதிர்வீச்சால்
சுலபமாக யாரைக் கொல்ல முடியும்?
மனிதனையா திமிங்கலத்தையா?
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
கூடங்குளம் அணுக்கழிவுகளைக் கடலில்
கொட்டுகிறார்கள் என்பது முழுப்பொய் மட்டுமல்ல
முட்டாள்தனமான பொய்யும் ஆகும்.
அணுக்கழிவுகளைக் கடலில் கொட்டியதால்தான்
திமிங்கலங்கள் இறந்து விட்டன என்பது
வடிகட்டிய முட்டாள்தனமான பொய்.
கொட்டப்பட்ட அணுக்கழிவில் இருந்து வெளிப்பட்ட
தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சால் (Harmful ionising radiation)
திமிங்கலங்கள் செத்து விட்டன என்பது உண்மையானால்,
மனிதன் எம்மாத்திரம்?
50 திமிங்கலங்களைக் கொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்த
கதிர்வீச்சால் ஆயிரக் கணக்கில் மனிதர்களைக் கொல்ல
முடியும். அதிலும் கடலின் அடியாழத்தில் வசிக்கும்
திமிங்கலங்களைக் கொல்ல முடியும் என்றால்,
மேற்பரப்பில் வசிக்கும் மனிதர்களை இன்னும்
சுலபமாகக் கொல்ல முடியும்.
ஆம், கதிர்வீச்சால் ஒரு திமிங்கலத்தை விட மனிதனை
சுலபமாகக் கொல்ல முடியும். இங்கு ஐந்தறிவு ஆறறிவு
என்பது ஒரு விஷயம் அல்ல. மனிதனின் சராசரி எடை
60 கிலோகிராம். திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கிய
திமிங்கலத்தின் சராசரி எடை 1500 கிலோகிராம்.
எனவே, மனிதனின் உடலை விட, திமிங்கலத்தின்
உடலில் அதிகமான அளவு செல்கள் உண்டு.
அதிக செல்களும் அதிக எடையும் உடைய
50 திமிங்கலங்களைக் கொல்லும் அளவு சக்தி படைத்த
கதிர்வீச்சால், எத்தனை மனிதர்களைக் கொன்று இருக்க
முடியும்? ஒரு எளிய கணக்கைப் பார்ப்போம்.
50 திமிங்கலங்களின் எடை (50X 1500) = 75000 கிலோகிராம்
1 மனிதனின் எடை = 60 கிலோகிராம்
இந்த 75000 கிலோகிராம் எடை எத்தனை மனிதர்களின்
எடைக்குச் சமம் என்று பார்க்க வேண்டும்.
அதாவது, 75000 divided by 60 = 1250 மனிதர்கள்
எனவே, கதிர்வீச்சு காரணமாக 50 திமிங்கலங்கள்
இறந்தன என்பது உண்மை என்றால், அதே அளவு
கதிர்வீச்சு குறைந்தது 1250 மனிதர்களைக் கொன்று
இருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லை என்பது
நாம் அறிந்ததே.
அணுக்கழிவு என்பது கோயம்பேடு காய்கறிச் சந்தையில்
சேரும் கழிவுகள் போன்று, லாரியில் லோடு ஏற்றி
அனுப்பக் கூடிய எளிய கழிவு அல்ல.
அணுக்கழிவில் ஆல்பா பீட்டா மற்றும் காமா கதிர்கள்
இருக்கும். இதை ஒரு இரும்புப் பெட்டியில் வைத்து
மூடினாலும் பயனில்லை. ஏனெனில் காமா கதிர்கள்
இரும்பைச் சுலபமாக ஊடுருவும் தன்மை கொண்டவை.
மேலும் காமா கதிர்கள் ஒளியின் வேகத்தில், அதாவது
ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில்
பரவக் கூடியவை. எனவே அணுக்கழிவைக் கடலில்
கொட்டுவது கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க
முடியாத விஷயம் என்பதை உணர வேண்டும்.
கூடங்குளம் உதயகுமார் போன்றவர்கள் வேண்டுமென்றே
திட்டமிட்டு, மக்களின் அறியாமையைத் தீய வழியில்
பயன்படுத்தி, பரப்பி வரும் கயமைத் தனமான
கிரிமினல் தன்மை வாய்ந்த மக்களுக்கு எதிரான
மோசடியை அம்பலப் படுத்தி உள்ளோம்.
************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக