வெள்ளி, 8 ஜனவரி, 2016

முகநூலுக்குப் போட்டியாக ஒரு தளத்தை உருவாக்கி
மார்க்கின் கொட்டத்தை அடக்குவோம்!
சொந்த வலைத்தளத்தை உருவாக்கி இயக்கும்
சீனாவைப் பார்! சீனாவில் முகநூலுக்குத் தடை!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
 முகநூல் என்பது 2004இல்தான் பிறந்தது. பத்து ஆண்டுகளில்,
அதாவது 2014 ஜனவரியில், 123 கோடி பயனர்களைக்
கொண்டதாக அது வளர்ந்தது.

என்றாலும் உலகின் சில நாடுகளில் அது தடை செய்யப்
பட்டுள்ளது. 150 கோடி மக்களைக் கொண்ட சீனா, 2009இல்
முகநூலைத் தடை செய்தது. நான்கு ஆண்டுகள் கழித்து
2013இல் தடை நீக்கப் பட்டதாக சீனா அறிவித்தது.

என்றாலும், சீனாவின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில்
மட்டுமே முகநூல் அனுமதிக்கப் படுகிறது. வெளிநாட்டுப்
பயணிகளுக்கு முழுவதுமாக அனுமதிக்கப் படுகிறது.

சீனா மட்டுமல்ல, வட கொரியா, கியூபா, வியட்நாம்
முதலிய கம்யூனிஸ்ட்  நாடுகளிலும் அவ்வப்போது
அவர்களின் தேவைக்கு ஏற்ப, தடை செய்யப் பட்டுள்ளது.

சீனாவில் சுதந்திரமான இணையப் பயன்பாடு கிடையாது.
மிகப்பெரிய இணையத் தணிக்கை குழு அங்குண்டு.
Great Firewall of China என்ற தணிக்கை அமைப்பு அனுமதிக்கும்
அளவுக்கு மட்டுமே அங்கு இணையத்தைப் பார்க்க முடியும்.

சீனா அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும்
நாடு. அமெரிக்காவின் முகநூலை நம்பி இராமல்,
சீனா தனக்கென,  முகநூல் போன்ற, ஒரு சமூக வலைத்
தளத்தை உருவாக்கி உள்ளது.

Tencent நிறுவனத்தின் கியூசோன் (Qzone) என்பது சீனாவில்
பிரபலமான சமூக வலைத் தளம். முகநூல் போலவே இதில்
வீடியோ, புகைப்படம், தரவுகள் ஆகியவற்றைப்
பரிமாறிக் கொள்ளலாம்.

127 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவிலும்
முகநூல் போன்ற ஒரு சமூக வலைத் தளத்தை நாம்
உருவாக்கலாம். உருவாக்க வேண்டும். சீனாவைப் போல்
மக்கள் சக்தி அதிகம் கொண்ட நம்மால் உருவாக்க
முடியும். அப்படி உருவாக்கினால் மார்க்கின் கொட்டத்தை
அடக்க முடியும்.

ஆனால், கி.பி 3016இல் கூட, நம்மால் அப்படி ஒரு தளத்தை
உருவாக்க முடியாது. ஏனெனில், நாம்  அடையாள அரசியல்
பேசி அழிந்து போவதற்கும் அல்லது அடிமையாக
இருப்பதற்கும் மட்டுமே லாயக்கானவர்கள்.
**************************************************************       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக