செவ்வாய், 5 ஜனவரி, 2016

பனியனும் கையில் செருப்புடன்
இசக்கிமுத்து அண்ணாச்சியும்!
-----------------------------------------------------------
ஆண்களில் நிறையப் பேர் பனியன் அணிகிறார்கள்.
சட்டை வந்தவுடனே பனியனும் வந்து விட்டது.
என்றாலும் பனியன் என்பது தமிழ்ச் சொல் அல்ல
என்கிறார்கள் தமிழுக்காகத் தீக்குளிப்பதற்காக
எப்போதும் கையில் மண்ணெண்ணெய் டின்னுடன்
அலைந்து கொண்டிருக்கும் தமிழ்ப் பற்றாளர்கள்.

அப்படியானால் பனியன் என்பதற்குச் சரியான
தமிழ்ச் சொல் என்ன? தமிழ் மண்ணெண்ணெய்க்
குழுவினர் பதில் தர வேண்டும்.

உள்ளாடை என்று பதில் சொன்னால், சொன்னவனை
அடிப்பதற்குக் கையில் பிய்ந்த செருப்புடன் பக்கத்தில்
நின்று கொண்டு இருக்கிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி.

எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் என்ற
நூலை எழுதினாரே பிரபல பின்நவீனத்துவர்
சாரு நிவேதிதா. அவர் ஏன் பனியனுக்கு இணையான
தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தவில்லை? தமிழில்
சொல் இல்லை என்கிறாராம் சா.நி.
----------------------------------------------------------------------------------------------     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக