திங்கள், 11 ஜனவரி, 2016

தமிழ் அறிஞரும் தொழிற்சங்கத் தலைவருமான திரு.வி.க
ஒரு முறை பெரியாரை, அவர் தங்கி இருந்த இடத்தில்
சந்தித்தார். திரு வி.க பழுத்த இறைப்பற்றாளர்; சைவ
சமயத்தவர். குளித்து விட்டு ஈர உடையுடன் வரும் திரு.வி.க
எதிரில் திருநீற்றுத் தட்டுடன் நிற்கும் பெரியாரைக் காண்கிறார்.

குளித்தவுடன் திருநீறு பூசும் வழக்கம் உடையவர் திரு.வி.க
என்பதை நன்கறிந்த பெரியார், தம் தலை சிறந்த விருந்தோம்பல்
பண்பை வெளிப்படுத்தினார். விருந்தோம்பலுக்கு தமது
நாத்திகம் குறுக்கே வராமல் காத்து, உயர்ந்த பண்பாளராகத்
திகழ்ந்த பெரியாரை வியந்து போற்றினார் திரு.வி.க.

 மதத்தில் புரட்சி செய்த மகான் என்ற தலைப்பிலான கலைஞர்
உருவாக்கிய ராமானுஜர் வரலாறு என்ற தொலைக்காட்சித்
தொடரைக் கண்டு வியந்த திருப்பதி தேவஸ்தானக் குழுவினர்
அத்தொடரின் ஒளிபரப்பு உரிமையைக் கலைஞரிடம் இருந்து
பெற்றனர். இந்நிகழ்வின் இறுதியில், கலைஞரின் இல்லத்தில்,
வேத மந்திரங்களை முழங்கச் செய்து அத்தொடரின்
உரிமையைப் பெற்றுக் கொண்டனர், தங்களின் மரபுப்படி.

கடைவாயில் வந்து யார் நின்றாலும், அவர்கள் விரும்பிக்
கோரியதைத் தந்து அருள்வது அன்றி, இல்லை என்னும்
சொல்லை அறியாதவரான கலைஞர் தம் இல்லத்தில்
வேத மந்திரங்கள் முழங்க அனுமதித்தார். இது கலைஞரின்
விருந்தோம்பல் பண்பின் வெளிப்பாடு.

முன்னாள் இஸ்ரோ தலைவரான டாக்டர் கே ராதாகிருஷ்ணன்
2014இல் பணி ஒய்வு பெற்றார். 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக