வெள்ளி, 1 ஜனவரி, 2016

SOMETHING IS BETTER THAN NOTHING என்பது பொருந்தாது!
----------------------------------------------------------------------------------------
மார்க் தர முன்வந்துள்ளது free internet அல்ல. மாறாக,
மொத்த இணையதளத்தில் அதிகபட்சம் 10 சதம் மட்டுமே
கொண்ட Free Basics மட்டுமே. இணையம் என்பதை வெட்டிச்
சுருக்குவதை ஏற்க இயலாது.
**
உண்மையில் அவருக்கு வள்ளல் தன்மை இருக்குமானால்,
ஐந்து கோடிப் பேருக்கு Free Basics தருவதற்குப் பதிலாக,
ஒரு கோடிப் பேருக்கு FREE INTERNET தரலாமே.
**
Something is better than nothing என்ற அடிப்படையில் இதைப்
பார்க்க முடியாது. ஏனெனில், வெட்டிச் சுருக்கப்பட்ட
இணையம் என்பதைப் பார்ப்பதால் இணையத்தின்
உண்மையான பயனைப் பெற முடியாது. மேலும்
மார்க் தான் விரும்பும் ஒரு சில வலைத்தளங்களை
மட்டும் பார்க்க அனுமதிப்பார். மற்ற வலைத்தளங்களை
முடக்குவார். இதனால் ஒட்டுமொத்த இணையச்
சூழ்நிலையே முற்றிலுமாகப் பாதிக்கப் படும்.
வணிகப் போட்டியில் தகுதி வாய்ந்த நிறுவனங்கள்
ஒடுக்கப் படும். மார்க்கின் ஆசி பெற்ற நிறுவனங்கள்
மட்டுமே செழிக்கும். இது காலப் போக்கில், சுதந்திரமாக
இயங்கும் இணையத்தை மார்க் ஆக்கிரமித்து
அடிமை ஆக்குவதில் போய் முடியும். எனவே மார்க்கின்
திட்டம் எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும். 
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக