வெள்ளி, 1 ஜனவரி, 2016

ராகுல் காந்தி எதைப் பார்க்கிறாரோ
அதை ராமசாமியும் பார்க்க வேண்டும்!
அருண் ஜெட்லி எதைப் பார்க்கிறாரோ
அதை அமாவாசையும் பார்க்க வேண்டும்!
டிஜிட்டல் டிவைட் என்றால் என்ன?
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
நீங்கள் மொபைலில் இன்டர்நெட் பார்த்தாலும் சரி,
கணினியில் பிராட்பேண்ட் மூலமாக இன்டர்நெட்
பார்த்தாலும் சரி, நீங்கள் கட்டணம் செலுத்திப்
பார்க்கிறீர்கள். உங்களைப் போல் இந்தியாவில்
சுமார் 10 கோடிப் பேர் இவ்வாறு கட்டணம் செலுத்திப்
பார்க்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒரு வகை.
**
அடுத்து, மார்க்கின் Free Basic மூலமாக ஒரு ஐந்து கோடிப்
பேர் இணையப் பயன்பாட்டுக்குள் வருவதாக வைத்துக்
கொள்வோம். இவர்கள் இலவசப் பிரிவினர்.
**
ஆக, இப்போது, இணையப் பயன்பாட்டாளர்கள் 15 கோடி
ஆகி விட்டார்கள். இந்த 15 கோடிப் பேரிலும் ஒருமித்த
தன்மை கிடையாது. கட்டணம் செலுத்துவோர் என்றும்
இலவசப்  பிரிவினர் என்றும் இரண்டு பிரிவுகள்
உருவாகி விடுகின்றன. இந்த இரண்டு பிரிவினருக்கும்
இடையில் இணையப் பயன்பாட்டில் சமத்துவம் கிடையாது.
**
கட்டணப் பிரிவினர் தாங்கள் விரும்பும் எதையும்
வீடியோ உட்பட பார்க்க முடியும். இலவசப் பிரிவினரோ
மார்க் எதைக் காட்டுகிறாரோ அதை மட்டும்தான்
பார்க்க முடியும்.Free Basics திட்டத்தில் வீடியோ தளங்கள்
அனுமதிக்கப் படவில்லை. மேலும் இணையவழியாக
பேச முடியாது. அதாவது மும்பை டெல்லியிலோ
வெளிநாட்டிலோ உள்ளோருடன் VoIP மூலமாகப்
பேச முடியாது.
**
தற்போது இணையத்தை யார் பயன்படுத்தினாலும்
அவர்களுக்கு சம வாய்ப்பு உள்ளது. அருண் ஜெட்லி
எதைப் பார்க்கிறாரோ அதை அமாவாசையும்  பார்க்க
முடியும். ராகுல் காந்தி எதைப் பார்க்கிறாரோ அதை
ராமசாமியும் பார்க்க முடியும்.மார்க்கின் திட்டம்
செயல்பாட்டுக்கு வந்தால்
இந்த சமநிலை, சமவாய்ப்பு பறிபோய்விடும்.
**
இவ்வாறு ஒரு பிளவு ஏற்பட்டு விடுகிறது. ஒரு வர்க்க பேதம்
போன்ற ஒரு பிரிவினை உண்டாகி விடுகிறது. இதுதான்
DIGITAL DIVIDE எனப் படுகிறது.

மார்க்கின் Free Basic திட்டத்தில், இணைகிறார் துலுக்காணம்.
அவரால் You Tubeஇல் ஒரு வீடியோ பார்க்க முடியுமா?
Free Basics திட்டத்தை ஆதரிப்பவர்களே, பதில் சொல்லுங்கள்!
-----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக