இந்திரா காந்திக்கு எதிரான சீக்கிய மக்களின் எழுச்சியை
வெறும் மத ரீதியிலான எழுச்சி என்று அதைக் குறுக்க
இயலாது. சீக்கியர்கள் ஒரு தேசிய இனமும் ஆவார்கள்.
பொற்கோவில் என்பது அமிர்தசரசில் அவர்களின் மாநிலத்தில்
உள்ளது. அங்கே இந்திய ராணுவம் புகுந்தது என்பதை
சீக்கியர்கள் ஏற்கவில்லை. பிந்தரன்வாலே இந்த
நடவடிக்கையின்போது இறந்தார். காலிஸ்தான் கோரிக்கை
எழுந்தது. பொற்கோவில் நடவடிக்கை தொடங்கி, இந்திரா
படுகொலை வரை நடந்த நிகழ்வுகள் யாவும் ஒரு தர்க்கத்
தொடர்ச்சியை (logical continuity) கொண்டிருந்தன.
**
இப்போது ராஜீவ் கொலையை ஆராய்வோம். மதுரை மீனாட்சி
அம்மன் கோவிலுக்கு ராஜீவ் ராணுவத்தை அனுப்பினாரா?
தமிழ்த் தலைவர்கள் எவரையாவது படுகொலை செய்தாரா?
தமிழ்நாட்டுக்கோ தமிழ் மக்களுக்கோ கொடுமை இழைத்தாரா?
ராஜிவின் ராணுவம் தமிழ்நாட்டில் முகாமிட்டு, தமிழ்ப்
பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதா?
இல்லை. தமிழ் மக்களிடம் ராஜீவ் குறித்த எதிர்ப்புணர்வோ
பகைமையோ இல்லை.
**
சீக்கிய மக்களிடம் இருந்த இந்திரா எதிர்ப்புணர்வு போல,
தமிழ் மக்களிடம் ராஜீவ் எதிர்ப்புணர்வு இல்லை. அதிலும்
ராஜிவைப் படுகொலை செய்கிற அளவுக்கு இல்லை.
எனவே தமிழர்கள் ராஜீவ் படுகொலையை ஏற்கவில்லை.
**
ஈழத்திற்கு அமைதிப் படையை அனுப்பினார், கொடுமை
இழைத்தார் என்பது தமிழ்நாட்டில் தாக்கத்தை
ஏற்படுத்தவில்லை. எனவே ராஜீவ் கொலையை தமிழ்
மக்கள் ஏற்கவில்லை. தமிழ் மக்கள் ஏற்காத இக்கொலையைச்
செய்த கொலையாளிகள் மீது மக்கள் பரிவு கொள்ளவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக