நான் திரிஷாவைக் காதலிக்கிறேன் ஏனென்றால்... என்ற
பாணியில் அமைந்த, ப்ரீ பேசிக்ஸ் திட்டத்துக்கு ஆதரவான
மொட்டைக் கடிதங்கள் அனைத்தையும்
செல்லாத வாக்குகளாக அறிவிக்க டிராய் முடிவு?!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------
டிராய்க்கு (TRAI) கருத்துக்கள் அனுப்பக் கடைசித் தேதியான
சனவரி 7, 2016 முடிவுற்றது. 24 லட்சம் கருத்துக்கள்
(மின் கடிதங்கள்) வந்துள்ளதாக டிராய் அறிவித்தது.
1) மொத்தம் வந்த கருத்துக்கள்: 24 லட்சம்
2) FreeBasicsக்கு ஆதரவு...............:: 18.94 லட்சம்
3) இணைய நடுநிலைக்கு ஆதரவு: 4.84 லட்சம்
4) தனிநபர் கடிதங்கள்........................: 2000
பிரீபேசிக்ஸ்க்கு ஆதரவாக @supportfreebasics.in மூலமாக
வந்தவை 13.5 லட்சம் கடிதங்கள். இக்கடிதங்கள் யாவும்
அனுப்புனரின் பெயரோ மின்னஞ்சல் முகவரியோ
இல்லாமல் மொட்டைக் கடிதங்களாக உள்ளன.
மேலும் உள்ள 5.44 லட்சம் கடிதங்கள் facebookmail.com
அக்கவுன்ட்கள் மூலமாக வந்துள்ளன. TRAI எழுப்பிய
கேள்விகளுக்கு இக்கடிதங்களில் பதில் தரப்படவில்லை.
எனவே, பிரீபேசிக்சை ஆதரித்து வந்துள்ள மேற்கண்ட
18.94 லட்சம் கருத்துகளையும் நிராகரிக்க டிராய் முடிவு
செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு கன்சல்ட்டேஷன் அறிக்கையை முன்வைத்து
அதன் மீது கருத்துக் கேட்டுள்ளது டிராய். குறிப்பாக,
differential pricing என்ற கோட்பாடு மீது கருத்துக் கூறுமாறு
டிராய் கோரியது. ஆனால் ப்ரீ பேசிக்ஸ் ஆதரவாளர்களோ
இதை கருத்துக் கணிப்பு போலக் கருதிக் கொண்டு
ப்ரீ பேசிக்சுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
"நான் திரிஷாவைக் காதலிக்கிறேன்; ஏனென்றால்..." என்ற
பாணியில் அமைந்தவை மேற்கூறிய 18.94 லட்சம்
கடிதங்கள். differential pricing குறித்து கருத்து எதுவும்
கூறாததால் மேற்கூறிய 18.94 லட்சம் கடிதங்களையும்
டிராய் நிராகரிக்கப் போவது உறுதி என்று தெரிகிறது.
அதே நேரத்தில், savetheinternet.com மூலமாக அனுப்பப்
பட்ட 4.84 லட்சம் கடிதங்களும் செல்லத்தக்கவை (VALID)
என்று டிராய் முடிவு செய்துள்ளது. ஏனெனில் டிராய்
கேட்ட கேள்விகளுக்கு குறிப்பாக differential pricing
பற்றிய கேள்விக்கு கூடாது என்று இந்த 4.84 லட்சம்
கடிதங்களும் கூறுகின்றன.
மேற்கூறிய காரணங்களால், இணைய நடுநிலைக்கு
ஆதரவாகவும், ப்ரீ பேசிக்சுக்கு எதிராகவும் டிராய்
தலைவர் ஆர்.எஸ். சர்மா அவர்கள் முடிவு எடுப்பார்
என்று நம்புவதாக நெட்டிசன்கள் தெரிவித்தனர்.
**************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக