சனி, 2 ஜனவரி, 2016

விவரக் குறிப்பு:
------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்,
சென்னை.

சொற்பொழிவுத் தலைப்பு:
----------------------------------------
புதிர் நிறைந்த பிரபஞ்சப் பெருங்கடலும் 
விடுவிக்க முயலும் சிறுதுளி மானுடமும்.
(power point presentation)

note: A lecture of two hours duration which covers the following:
various theories of universe including Big Bang,the origin of universe,
galaxies, solar system, planets, exoplanets, black holes, truth about UFOs 
and aliens, various space missions, black holes, Einstein's gravity 
versus Newton's gravity, the questions still unanswered by scientists, 
future of the universe and the mankind.  

அஞ்சல் முகவரி:
------------------------------
எண்:5, 6ஆவது தெரு,
சுபிக்சா அடுக்ககம்
சௌராஷ்டிரா நகர், சூளைமேடு,
சென்னை 600 094
அலைபேசி: 94442 30176
மின்னஞ்சல் ilangophysics@gmail.com 

2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டநியூட்டன் அறிவியல் மன்றம்  
அறிவியலைப் பரப்புவதை (Science Communication) இலக்காகக் 
கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் 
அறிவியல் என்பது பள்ளி கல்லூரி வளாகங்களின் மதில்களுக்குள்
கட்டுண்டு கிடக்கிறது. இந்த மதில்களைத்  தாண்டி பொதுவெளிக்கு 
அறிவியலை எடுத்து வந்து அதை மக்களிடம் சேர்ப்பதும் 
சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை (scientific temper)
ஏற்படுத்துவதும் நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பணி.

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் தலைவர் இளங்கோ 
1) அறிவியல் கட்டுரைகளை ஏடுகளில் எழுதி வருபவர்.
2) சென்னை வானொலியில் அறிவியல் உரைகளைப் 
பல ஆண்டுகளாக நிகழ்த்தி வருபவர்.
3) பல்வேறு தொலைக்காட்சி சேனல்களின் அறிவியல் 
நிகழ்ச்சிகள், விவாதங்களில் பங்கு பெற்று அறிவியல் 
விளக்கம் அளித்து வருபவர். அண்மையில் "எல்நினோ" 
குறித்தும் பருவநிலை மாறுதல் குறித்தும் நியூஸ்-7
மற்றும் "சத்யம்" தொலைக்காட்சிகளில் அறிவியல் 
விளக்கம் அளித்தார்.
4) பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் மாணவர்கள் நடுவே 
அறிவியல் சொற்பொழிவுகள் நடத்தி வருபவர்.
5) மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின்
ஆதரவுடன் நடந்த பல்வேறு INSPIRE அறிவியல் முகாம்களில் 
பங்கேற்று அறிவியல் சொற்பொழிவுகள் நடத்தியவர்.
6) சுருங்கக் கூறின், சாத்தியமான அனைத்து வழிகளிலும் 
அறிவியலைப் பரப்புவதை மேற்கொண்டு வருகிறார்.
7) இதன் மூலமாக மக்களிடம் நிலவும் அறிவியலுக்கு 
எதிரான தவறான நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகளைக் 
களைவதில் பெரும்பங்கு ஆற்ற முடிகிறது.
-------------------------------------------------------------------------------------------     .       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக