ஹிட்லரும் மார்க்கும்!
இணைய உலகப் போரில் மார்க் வெற்றி கொண்ட நாடுகள்!
120 கோடி மக்களைக் காப்பாற்றிய 10 லட்சம் நெட்டிசன்கள்!
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------------------
1) இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் என்ன செய்தாரோ
அதையே தற்போது முகநூல் அதிபர் மார்க் செய்து வருகிறார்.
2) இணையம் என்பது உலகம் தழுவியது. தற்போது இணையப்
பயனாளிகள் மீது மார்க் தொடுத்திருக்கும் போர் உண்மையில்
ஒரு உலகப் போரே.
3)இந்த இணைய உலகப் போரில் ஒரு சில நாடுகளை
மார்க் ஏற்கனவே கைப்பற்றி விட்டார்.
4) வளரும் நாடுகள் என்ற கௌரவப் பெயரைக் கொண்ட
ஏழை நாடுகள் சிலவற்றை மார்க் கைப்பற்றி விட்டார்.
5) 2013 ஆகஸ்டில் மார்க் தொடங்கிய திட்டம் இன்டர்நெட்.ஆர்க்
என்பது. இத்திட்டத்தின் பெயரை தற்போது Free Basics என்று
மாற்றி அறிவித்து உள்ளார். இந்தப் பெயர் மாற்றம்
மார்க்கே அதிகார பூர்வமாக அறிவித்தது. இதைத்தான் நாம்
படையெடுப்பு என்று குறிப்பிடுகிறோம்.
6) திட்டம் ஆரம்பித்த 11 மாதங்களில் முதல் வெற்றியை
அடைந்தார் மார்க். ஆம், ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவை
வெற்றி கொண்டார். அங்கு அவரின் திட்டம் அறிமுகப்
படுத்தப் பட்டது(launched)
7) தொடர்ந்து,தான்சேனியா, கென்யா, கொலம்பியா, கானா
ஆகிய நாடுகளையும் பிடித்தார். அதாவது அங்கெல்லாம்
இவரின் மோசடித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
8) தொடர்ந்து இந்தோனேஷியா, செனெகல், வங்கதேசம்
ஆகிய நாடுகளையும் பிடித்தார்.
9) பட்டியல் நீள்கிறது. முழுப் பட்டியலையும் தருவது
இக்கட்டுரையின் நோக்கம் அல்ல.
10) தாம் வெற்றி கொண்ட நாடுகளில் இணையத்தில்
எந்த அளவுக்கு ஊடுருவி இருக்கிறார் என்பது பற்றிய
தகவல் தற்போது நம்மிடத்தில் இல்லை. கிடைத்ததும்
வெளியிடப்படும்.
11) அதே வேகத்தோடு இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவின்
120 கோடி மக்களை வெற்றி கொண்டு விடலாம் என்று
மனப்பால் குடித்தார்.
12) ஆனால் இந்தியா அவருக்கு மரண அடி கொடுத்தது.
பத்து லட்சம் இணையக் குடிமக்கள் (netizens) அவரின்
திட்டத்துக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.
13) மோடி அரசு நெட்டிசன்களின் குரலுக்குச் செவி
சாய்த்தது. மார்க்கின் திட்டத்தை அனுமதிக்கவில்லை.
14) சமூக வலைத் தளங்களில் மோடிக்கு அபரிமிதமான
ஆதரவு இருந்ததாலும், அந்த ஆதரவை இழக்க மோடி
விரும்பாததாலும், அவர் மார்க்கின் திட்டத்தை
அனுமதிக்கவில்லை.
15) இத்திட்டத்தை அனுமதிக்கலாமா வேண்டாமா என்று
இணையப் பயனர்களின் கருத்தைக் கேட்டு, அதைப்
பொறுத்து முடிவு செய்யலாம் என்று மோடி அரசு
தீர்மானித்தது. அதன் பிரகாரம் கருத்துக் கேட்கப்
பட்டது.
16) கருத்துக்களைப் பெற 30.12.2015 கடைசித் தேதி என்று
TRAI அறிவித்தது. அதன் பிறகு 07.01.2016 வரை கடைசித்
தேதி நீட்டிக்கப் பட்டது.
17) கருத்துக்களை அனுப்பி மோடி அரசை வலியுறுத்தி
இருக்கிறோம். தொடர்ந்து போராடுவோம்.
----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக