புதன், 27 ஜனவரி, 2016

புதிய கட்சி தொடங்கி இருக்கும் உதயகுமார் 
முரண்பாடுகளின் மூட்டை! 
----------------------------------------------------------------
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஆம் ஆத்மி 
கட்சியில் சேர்ந்தார் கூடங்குளம் உதயகுமார். 
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 
15000 வாக்குகள் மட்டும் பெற்று டெப்பாசிட் இழந்தார். 
பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார்.

தற்போது எதிர்வரும் 2016 சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு 
பசுமைத் தமிழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.
ஏற்கனவே இருந்த பசுமைத் தமிழகம் என்ற அமைப்பைத்தான்  
அரசியல் கட்சியாக மாறுவதாகக் கூறி உள்ளார்.

அப்படியானால் அந்த அமைப்பு ஒரு அரசுசாரா நிறுவனமா?
அதாவது என்.ஜி.ஓ அமைப்பா? எந்த நாட்டில் இருந்து 
இந்த அமைப்பு நிதி பெறுகிறது? இவ்வாறு மக்கள் கேள்வி 
எழுப்புகிறார்கள். ஏனெனில் உதயகுமார் தமிழ்நாட்டில் 
இருந்ததை விட வெளிநாட்டில் இருந்த காலம்தான் அதிகம்.
இதற்கெல்லாம் பதிலளிக்க உதயகுமார் கடமைப் பட்டவர்.

தற்போது மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் 
சந்திக்கப் போவதாகவும், நெல்லை மாவட்டம் ராதாபுரம் 
தொகுதியில் தமது கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார்.  

ரயிலில் துண்டு போட்டு இடம் பிடிப்பது போல, ராதாபுரம் 
 தொகுதிக்கு அட்வான்ஸ் துண்டு போட்டுள்ளார். ஆனால் 
இவரின் முந்திரிக் கொட்டைத்தன அறிவிப்பால், கூட்டணித் 
தலைவர் வைகோ மிகவும் எரிச்சல் அடைந்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுக்குள் 
எந்தப் பேச்சு வார்த்தையும் இதுவரை நடைபெறாத 
நிலையில், உதயகுமார் ராதாபுரம் தொகுதியைத் 
தமக்கு ஒதுக்கக்கோரி வெளிப்படையாக அறிவித்தது 
வைகோவை மட்டுமல்ல பிற கூட்டணிக் கட்சிகளையும் 
எரிச்சல் அடைய வைத்துள்ளது. முதல் கோணல் முற்றும் 
கோணல் என்பது போல ஆகி விட்டதே என்று வைகோ 
மிகுந்த கோபம் அடைந்துள்ளார்.

****************************************************************

  




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக