திங்கள், 25 ஜனவரி, 2016

பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த ஜெயமோகன் ஒரு அசடு!
அடுத்த வீட்டுக்காரனை விட்டு பாம்பைப்  பிடிக்கச்
சொல்ல வேண்டுமே தவிர நாமே போய் பாம்பைப்
பிடிக்கக் கூடாது!
இசக்கி முத்து அண்ணாச்சி கருத்து!
--------------------------------------------------------------------------------------------
2016 குடியரசு தினத்தன்று தமக்கு வழங்கப்பட இருந்த
பத்மஸ்ரீ விருதை வேண்டாம் என்று மறுத்துள்ளார்
ஜெயமோகன். இது தப்பு என்கிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி.

"இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டு இருக்கிற தமிழக
இடதுசாரிகளான CPI,  CPM கட்சி எழுத்தாளர்களைப்
பார்த்தாவது ஜெயமோகனுக்கு புத்தி வர வேண்டாமா?

இந்தியாவில் எந்த எழுத்தாளர் விருதைத் திருப்பிக்
கொடுத்தாலும், அதை ஊருக்கு முந்திக் கொண்டு முதன்
முதலில் ஆதரிப்பவர்கள் நம்மூர் கம்யூனிஸ்ட்கள்.

ஆனால் ஒருவன் கூட விருதைத் திருப்பிக் கொடுக்க
மாட்டான். அடுத்தவன் திருப்பிக் கொடுத்தால் அதைப்
பாராட்டுவான். ஆனால் ஒருநாளும் இவன் திருப்பிக்
கொடுக்க மாட்டான்.

வீட்டுக்குள் பாம்பு புகுந்து விட்டால், அடுத்த வீட்டுக் காரனை
விட்டு பாம்பைப் பிடிக்கச் சொல்லி விட்டு, நாம் வெளியே
நின்று கொள்ள வேண்டும். இதுதான் நம்மூர் கம்யூனிசம்.
இது தெரியாமல் ஜெயமோகன் அசட்டுத் தனமாக நடந்து
கொண்டு விட்டாரே!

புரட்சி, அதிதீவிரப் புரட்சி, ரத்தம் சிந்தும் புரட்சி என்றெல்லாம்
வீராவேசமாகப் பேச வேண்டும். ஆனால்  காரியம் என்று
வரும்போது சாமர்த்தியமாகப் பின்தங்கி விட வேண்டும்.
பேச்சு பேச்சாத்தான் இருக்கணும். அது ஒரு நாளும்
காரியமா மாறக்கூடாது. இதுதான் நம்மூர் கம்யூனிசம்.
இது தெரியாமல் ஜெயமோகன் கோட்டை விட்டு விட்டாரே!

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே-காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே
என்பதுதானே நம்மூர் CPI,CPM போலிகளின் தாரக
மந்திரம்! இது புரியலியே ஜெயமோகனுக்கு!

புரட்சி என்பது பேசுவதற்குத்தானே தவிர செய்வதற்கு அல்ல
என்ற நம்மூர் தா.பாண்டியன்-ராமகிருஷ்ணன் வகையறாவைப்
பார்த்து இனியாவது  திருந்தட்டும்!"

இவ்வாறு இசக்கி முத்து அண்ணாச்சி கருத்துத் தெரிவித்தார்.
*********************************************************************
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக