வியாழன், 7 ஜனவரி, 2016

1) OTT services என்பது மேலதிக சேவையோ அதிகரித்த சேவையோ
அல்ல. It is not an additional service at all.
2) over the top என்ற ஆங்கிலச் சொல்லில் இருந்து மேலதிக சேவை என்றெல்லாம் முடிவுக்கு வரக்கூடாது. அறிவியல் தொழில்நுட்ப
ரீதியாக OTT என்பது எதைக் குறிக்கிறது என்ற புரிதலில்
இருந்துதான் மொழி பெயர்க்க முடியும். சாதாரண ஆங்கில
உரைநடையை மொழிபெயர்ப்பது போல் அல்ல இது.
இது தொழில்நுட்பத்தை மொழிபெயர்ப்பது.  
**
3) 2011இல் டீன் பப்லெ என்ற wireless industry analyst உருவாக்கிய
சொல் இது. டீன் பப்லே எந்தச் சூழலில் உருவாக்கினார்,
எந்தத் தேவையில் இருந்து உருவாக்கினார் என்பது
குறித்தெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டிருப்பது
இந்த மொழிபெயர்ப்புக்கு அவசியமாகும். 
4) OTT services என்பதற்கு மேடைச் சேவைகள் என்ற தொடரை
உருவாக்கி ஆயிற்று. புதுச்சொல் உருவாக்கத்தில் எவ்விதச்
சிக்கலும் இல்லை.
**
5) கட்டுரை குறிப்பிடுவது கலைச்சொல் உருவாக்கச் சிக்கல்
பற்றி அல்ல. உற்பத்தியில் இருந்து துண்டிக்கப் பட்டு
விட்டதால், தமிழ் வெறும் பண்பாட்டுத் தளத்தில் மட்டுமே
உயிரோடு இருக்கிறது என்ற கசப்பான உண்மையைத் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக