செவ்வாய், 12 ஜனவரி, 2016

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இடம் மதுரை.
அப்படியானால் மதுரைக்கு வடக்கில் உள்ள
வட தமிழ்நாட்டுப் பகுதிகள் எல்லாம் தமிழர் வாழ்ந்த
இடம் அல்ல என்று கருத முடியாது. அது போலவே,
தென் மாவட்டங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு
நடப்பதால் அதைத் தமிழர் பண்பாடு என்று எப்படிச்
சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்புவது சிறுபிள்ளைத்
தனமானது. தென் மாவட்டங்களில் உள்ளவன்
எல்லாம் ஆங்கிலேயனா அல்லது பிரெஞ்சுக் காரனா?
**
இந்தக் கட்டுரை மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை
வலியுறுத்துகிறது. பண்பாட்டுக்கூறு உள்ள விஷயங்களுக்கு
எவரும் யாந்திரிகச் சாவை (mechanical death) விதிக்க முடியாது.
அவை காலப்போக்கில் உலர்ந்து உதிர்ந்து விடும்.
**
மார்க்சியம் கூறும் வரலாற்றுப் பொருள்முதல்வாத வழியில்
ஆராய்ந்து எங்கல்ஸ் கூறியதைக் கணக்கில் கொண்டு
இக்கட்டுரை அக்கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.
**
இதைப் புரிந்து கொள்ளாமல் இருந்தால், இக்கட்டுரையைப்
புரிந்து கொள்ள இயலாது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக