ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்த்த வழக்கு
இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்!
------------------------------------------------------------------------
127 கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள
ஜனநாயக முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்ட
மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி
ஒரு உத்தரவைப் பிறப்பிக்கிறது.
அரசின் உத்தரவை எதிர்த்து எந்த ஒரு இந்தியக்
குடிமகனும் நீதி மன்றம் செல்லலாம். இது இந்தியாவின்
அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை.
ஆனால் பேரறிவாளர் அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச்
சட்டம் இந்தியக் குடிமகனுக்கு மட்டுமே இந்த உரிமையை
வழங்குகிறது. அந்நிய நாட்டவர்க்கு இந்த உரிமையை
வழங்கவில்லை.
இன்று ஜல்லிக்கட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
வழக்குத் தொடுத்து இருக்கும் PeTA என்ற அமைப்பு
( Protection of ethical Treatment to Animals) அந்நிய நாட்டில்
இருந்து நிதி உதவி பெறுகிற, அந்நிய எஜமானர்களின்
கட்டளைப்படி நடந்து இந்தியப் பண்பாட்டைச் சீர்குலைக்கிற
தேசவிரோத அமைப்பு.
இவர்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து
இருப்பதை, ஒரு இந்தியக் குடிமகனின் உரிமையாகப்
பார்க்கக் கூடாது. இது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட
சவாலாகவே பார்க்கப் பட வேண்டும். ஏனெனில் வழக்குத்
தொடுத்த அமைப்பு இந்திய அமைப்பு அல்ல. அந்நியக்
கைக்கூலி அமைப்பு.
அந்நியக் கைக்கூலிகளை முறியடிப்போம்!
-----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக