ஞாயிறு, 17 ஜனவரி, 2016

மக்களிடம் அச்சத்தை விதைப்பவர்களுக்கு என்ன நல்ல
நோக்கம் இருக்க முடியும்? புறநிலை உண்மையைப்
பரிசீலிக்கத் தயாராக இல்லாமல், எந்தப் பழியாக
இருந்தாலும் அணு உலையின் மீது போடுவது என்ன நேர்மை?
1973இல் இதே போன்று சுமார் 50 திமிங்கலங்கள் திருச்செந்தூர்
மணப்பாடு அருகில் கரை ஒதுங்கின என்று அவ்வூரினர்
கூறியதாக எனக்குத் தகவல் வந்தது. அப்போது நான்
திருநெல்வேலியில் படித்துக் கொண்டு இருந்தேன்.
எனவே என்னுடன் படித்த நண்பர்களிடம் விசாரித்துத்
தெரிந்து கூறுமாறு கேட்டு இருக்கிறேன். திருச்செந்தூரும்
மணப்பாடும் கூடங்குளமும் அறியாதவனா நான்?
**
திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதற்கு ஆயிரம் காரணங்களை
விவாதத்தில் பங்கேற்றவர்கள் கூறினார்கள். அதை
உள்வாங்கவே மனம் இல்லாமல் அறிவியலுக்கு எதிராக,
கட்டுக் கதைகளையே மக்கள் நம்ப வேண்டும் என்று
திட்டமிட்டுச் செயல்படுவோரின் நோக்கம்தான் யாது?
**
அணு உலையை எவர் வேண்டுமானாலும் எதிர்க்கவோ
ஆதரிக்கவோ செய்யலாம். அதற்கான உரிமை உண்டு.
ஆனால், திமிங்கலம் கரை ஒதுங்குவது முற்றிலும் வேறுபட்ட
நிகழ்வு. அதற்கும் ஆறு மாதமாக மூடிக் கிடக்கும்
அணு உலைக்கும் தொடர்பு படுத்துவது மொட்டைத்
தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாக
அமையாதா?
**
நான் என்னுடைய விளக்கத்தில் மக்களுக்கு நம்பிக்கையைக்
கொடுத்து உள்ளேன். ஏனெனில் மார்க்சிசம் என்பது
Life Affirmation Philosopy. அது Life Negation Philosophy அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக