புதன், 29 ஏப்ரல், 2015

1925இல் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
அப்போது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி
இருக்கவில்லை. இந்திய சமூகச் சிக்கல்களை ஆராய்ந்து,
ஒரு குறிப்பான வேலைத்திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்தார்
பெரியார். அதுபோலவே அம்பேத்கார். பெரியாரும் அம்பேத்காரும்
கம்யூனிசத்தை ஏற்கவில்லை என்பது உண்மையாகவே
இருந்துவிட்டுப் போகட்டும். அவர்கள் கம்யூனிசத்தின் எதிரிகளா
என்று பார்த்தால் இல்லை என்பதை நாடறியும்.
**
இங்கு கேள்வி இதுதான். பெரியார்+அம்பேத்கார் versus மார்க்சியம்
என்று எடுத்துக் கொள்வோம். இதில் உள்ள முரண்பாடு,
நட்பு முரண்பாடா அல்லது பகை முரண்பாடா என்பதுதான் கேள்வி.
சாதி வெறி பிடித்த  CPI, CPM கட்சிகளின் போலி மார்க்சிஸ்ட்கள்
பெரியாரியத்துக்கும் மார்க்சியத்துக்கும் இடையில் ஒரு
பகை முரண்பாட்டைக் கற்பித்தார்கள். நேச சக்தியை எதிரியாகக்
கருதினார்கள். இதனால் பார்ப்பனீயம் வளர்ந்தது; மார்க்சியம்
தாழ்ந்தது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக