திங்கள், 27 ஏப்ரல், 2015

கணித மேதை ராமானுஜன்!
--------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
மிக உயர்ந்த அறிவுத்திறன்  (IQ) உடைய இந்தியர்கள் என்று 
மூவர் கருதப் படுகிறார்கள். அம்மூவரும் தமிழர்களே.
1) ராமானுஜன் 2) சி.வி.ராமன் 3) விஸ்வநாதன் ஆனந்த்.
அறிவியல் துறையில் மட்டுமே அதி உயர் நுண்ணறிவுத் 
திறனை ஒருவர் பெற முடியும். சதுரங்கம் என்பது கணித 
விதிகளுக்கு உட்பட்ட விளையாட்டு; அறிவியல் பூர்வமான 
விளையாட்டு. எனவே சதுரங்க மேதை என்பவர் அதி உயர் 
அறிவுத்திறன் படைத்தவராக இருப்பது இயல்பே.
**   
ராமானுஜன்  கணித மேதை. பிறப்பு: 22.12.1887; இறப்பு:
26.04.1920. முப்பத்து மூன்று வயது வரை மட்டுமே வாழ்ந்து 
மறைந்த ராமானுஜன் கணித உலகில் காலத்தால் அழியாத 
சுவடுகளை விட்டுச் சென்றுள்ளார். ஆய்லர், ஜாக்கோபி 
ஆகிய இரு கணித மேதைகளுடன் ஒப்பிடப் படுகிறார்.       
**
ராமானுஜன் பிறந்த நாளான டிசம்பர் 22 இந்தியாவில் 
தேசிய கணித நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப் 
படுகிறது. ராமானுஜனின் 125ஆவது பிறந்தநாளை ஒட்டி,
டிசம்பர் 2011 அன்று சென்னையில் அன்றையப் பிரதமர் 
டாக்டர் மன்மோகன்சிங் இந்த அறிவிப்பைச் செய்து 
ராமானுஜனுக்குப் பெருமை சேர்த்தார். ராமானுஜன் 
படித்த அதே கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் 
படித்தவர் டாக்டர் மன்மோகன் சிங். 
**
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதற்கு இணங்க 
ராமனுஜனின் மகிமையை உணர்ந்தவராக மன்மோகன் சிங் 
இருந்தார் என்பது நாம் பெற்ற பேறு. ஒரு கூடுதல் தகவல்.
இந்தியப் புள்ளியியல் மேதை டாக்டர் மகல்நோபிஸ்,
ராமானுஜனுடன் அதே காலத்தில் கேம்பிரிட்ஜில் படித்தவர். 
இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
**
ராமானுஜன் நினைவைப் போற்றுவோம். எப்படிப் 
போற்றுவது? ஒரே வழிதான். கணக்கைப் படியுங்கள்;
கணக்குகளைப் போடுங்கள். அதன் மூலமே ராமானுஜனைப் 
போற்ற இயலும்.
**
20க்கும் 30க்கும் இடையில் (both numbers inclusive) எத்தனை 
பிரைம் நம்பர்கள் உள்ளன? அவை யாவை?
இதற்கு விடை கண்டு ராமானுஜனுக்கு அஞ்சலி  
செலுத்துங்கள்!   
***********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக