சனி, 11 ஏப்ரல், 2015

கலைஞரின் ராமானுஜர்: சிலரின் பிறழ் புரிதல்கள்!!
------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------------------------------------------
புத்த சமண மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, மனுதர்மத்தை 
எதிர்த்துப் போரிட்டவர் ராமானுஜரே. கலைஞரின் ராமானுஜ 
காவியம் சாதியத்தின் முதுகில் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் 
சூடு போடும். இதனால், கலைஞரின் மீதான பார்ப்பன வன்மம் 
மேலும் அதிகரிக்கும். இதை உணர்ந்தேதான் எழுதுகிறார் 
கலைஞர். இது வாக்குகளைக் குறிவைத்த அரசியல் 
செயல்பாடு அன்று. மாறாக, சாதியத்தின் முகத்தில், 
ராமானுஜரைக் கொண்டு ஓங்கி அறைய வைக்கும்
இலக்கியச் செயல்பாடு. இதனால் வேதபுரி நடுங்கி நிற்கிறது.
**
இந்தியத் துணைக் கண்டத்திலேயே தீவிர அரசியலில் 
இருந்து கொண்டு, இலக்கியம் படைப்பவர் கலைஞர் 
மட்டுமே. கலைஞரை இலக்கியவாதியாகப் பாராமல்,
அரசியல்வாதியாக மட்டும் பார்ப்பதால், இது போன்ற 
பிறழ் புரிதல்கள் ஏற்படுகின்றன. கலைஞரின் ராமானுஜர் 
குறித்து, முகநூல் வாசகர்களுக்காக, பதினைந்து 
கட்டுரைகள் எழுதி உள்ளேன். அவற்றைப் படித்துப் 
பார்க்குமாறு வேண்டுகிறேன்.
*******************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக