சனி, 18 ஏப்ரல், 2015

 பிள்ளைகளின் படிப்பில் மண் அள்ளிப் போடாதே!
யூ டியூபில் வீடியோ பார்க்க கட்டணம் வசூலிக்காதே!
(more on NET NEUTRALITY)
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------
வெறும் எட்டரை நிமிஷம் மட்டுமே ஓடக்கூடிய ஒரு 
யூ டியூப் வீடியோவை இங்கு இணைத்துள்ளேன். இது 
ஐன்ஸ்டின் கண்டுபிடித்த சார்பியல் கோட்பாட்டை 
எளிய முறையில் விளக்கும் வீடியோ. இதை இதுவரை 
12 லட்சம் பேர் பார்த்து உள்ளனர். ( VIEWED BY 12,48,561).
ஜூலை 2010இல் பதிவேற்றப் பட்ட இதை, இந்த ஐந்து 
ஆண்டுகளில் 12 லட்சம் பேர் பார்த்தனர் என்பது பெரிய 
விஷயம்.
**
தற்போது யூ டியூபில் வீடியோ பார்க்கக் கட்டணம் வசூலிப்போம் 
என்று கூறும் ஏர்டெல் நிறுவனத்தின் கோரிக்கை எவ்வளவு 
அநியாயமானது என்று புரிந்து இருக்கும். கட்டணம் வசூலித்தால் 
இந்த வீடியோவை 12 லட்சம் பேர் பார்ப்பார்களா?
பார்க்க முடியுமா? பிள்ளைகளின் படிப்பில் மண்ணை அள்ளிப்
போடும், லாபவேட்கை மிகுந்த ஏர்டெல், ரிலையன்ஸ் 
நிறுவனங்களே, இணைய நடுநிலையைச் சீர்குலைக்க வேண்டாம்.   
**
எனவே, இணையதள நடுநிலையைப் பாதுகாப்போம்.
மத்திய அரசே, இணையதள நடுநிலையை உறுதி செய்!
***********************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக