செவ்வாய், 28 ஏப்ரல், 2015

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி
*
திட விசும் பெரிவளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதுமாய் அவை யவை தொறும்
உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே
*
உறுதியான ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், பூமி என்ற பஞ்ச பூதங்களை ஆதாரமாகக் கொண்டு உருவாகிய யாவும் அவனே என்று சொல்லும்படி அவற்றுக்கு மூல காரணமாயிருந்து, அந்த அந்தப் பொருள்கள் அனைத்திலும் உடலில் ஆத்மா எந்த இடத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியாதபடி மறைந்திருத்தல் போன்று உள்ளும் வெளியிலும் பரவி ஒளி பொருந்திய வேதத்தில் உள்ளவனாகிய எம் பெருமான்: பிரளய காலத்தில் தனக்குள்ளே ஒடுங்கிக்கொள்ளும் தன்மையுடையவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக