வியாழன், 23 ஏப்ரல், 2015

பார்ப்பானுக்கு முதல் பந்தி!
சூத்திரனுக்கு இரண்டாம் பந்தியா?
------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-----------------------------------------------------------
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் ஒரு குருகுலம் 
நடைபெற்றது.குருகுலம் என்றால், மாணவர்களுக்குக் கல்வி 
அளிப்பது மட்டுமின்றி, உணவும் உறைவிடமும் அளிப்பதாகும்.
அதாவது, இன்றைய உண்டு உறைவிடப் பள்ளிகள் (RESIDENTIAL
SCHOOLS) போன்றது அன்றைய குருகுலம். மேலும் குருகுலத்தில் 
படிக்கும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், கல்வி ஆகிய 
அனைத்தும் இலவசம்.
**
இந்த குருகுலத்துக்கான செலவுக்கு காங்கிரஸ் கட்சி நிதி 
அளித்தது. வ.வே.சு. அய்யர் குருகுலத்தை நடத்தி வந்தார்.
இங்கு பார்ப்பனர்களுக்கு முதல் பந்தியிலும் பிற சாதியினர் 
அனைவருக்கும் இரண்டாம் பந்தியிலும் சாப்பாடு போடப் 
பட்டது. முதல் பந்தி முடிந்து, பார்ப்பனர்கள் எல்லோரும் 
சாப்பிட்டு முடித்த பின்னர்தான் சூத்திரர்கள் சாப்பிட முடியும்.
**
இங்கு சூத்திரர்கள் என்று குறிப்பிடுவது யாரை என்றால், 
திருநெல்வேலி சைவப் பிள்ளைமாரையும், சைவச் 
செட்டியாரையும் தான். நாடார், தேவர், கோனார் போன்ற 
பிற சூத்திரச் சாதியினர் அன்று படிப்பதற்கான சூழல் 
இல்லை. முன்னேறிய சாதியாக (FORWARD) இன்று உள்ள 
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்கள் அன்று பார்ப்பனரால் 
சூத்திரர்களாக இழிவு செய்யப் பட்டனர்.
**
சூத்திரனுக்கு ஏன் இரண்டாம் பந்தி என்று கேள்வி கேட்டார்
தந்தை பெரியார். அதுதான் ஐதீகம் என்றார் வ.வே.சு. அய்யர்.
சமபந்தி போஜனம் நடத்த வேண்டும் என்றார் பெரியார். 
மறுத்தார் அய்யர்.
**
இந்த நிகழ்வுகள் எல்லாம் இன்றைக்குத் தொண்ணூறு 
ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. அன்றைய சமூகத்தில் 
மூன்று சதமே உள்ள பார்ப்பனர்கள் 97 சதம் உள்ள 
பெரும்பான்மை மக்களை அடிமைப் படுத்தி வந்தனர்.
இந்த ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி 
முன்வரவில்லை. எனவே தந்தை பெரியார் காங்கிரசை 
விட்டு வெளியேறினார். 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் 
தொடங்கினார்.
***
பார்ப்பனர்கள் செய்த கொடுமைகளைப் பற்றிய வரலாற்றைப்  
படிக்கிற இன்றைய இளைஞன் பூணூலை அறுக்கிறான் 
என்றால், அந்த இளைஞன் மீது குற்றம் கூற முடியுமா?
பார்ப்பனர்களே, பார்ப்பன அடிவருடிகளே, பதில் 
சொல்லுங்கள்.
**
பார்ப்பனர்கள் தாங்கள் இழைத்த கொடுமைகளுக்குப் 
பிராயச் சித்தம் செய்யாமல், இது போன்ற நிகழ்வுகளைத் 
தவிர்க்க முடியாது. 
*********************************************************************  
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக