திங்கள், 13 ஏப்ரல், 2015

லெனினியம் என்பது மார்க்சியத்தின் பிரிக்க முடியாத
ஒரு கூறு ஆகும். அது எவ்விதத்திலும் மார்க்சியத்தின் திரிபு
ஆகாது. ஏனெனில், மார்க்சியம் என்பது தேங்கிப்போன ஒரு
மத நூல் அல்ல.சமூகத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து, தானும்
வளர்ந்து கொண்டு இருக்கிற ஒரு தத்துவமே மார்க்சியம்.
அது மார்க்சோடு முடிந்து விடவில்லை. லெனினால் வளர்த்து
எடுக்கப்  பட்ட மார்க்சியமே லெனினியம் ஆகும். இது எங்ஙனம்
திரிபு ஆகும்? குழந்தை சிறுவன் ஆவதும், சிறுவன் இளைஞன்
ஆவதும் இயல்பான வளர்ச்சியே அன்றித் திரிபு ஆகாது.
அதுபோல, லெனினியம் என்பது மார்க்சியத்தின் இயல்பான
வளர்ச்சியே ஆகும். இதைத் திரிபு என்று மதிப்பிடுவது
பிறழ்ந்த மனநிலையின் வெளிப்பாடான பிறழ் புரிதலின்
விளைவே ஆகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக