செவ்வாய், 14 ஏப்ரல், 2015

தொடர்ச்சி இல்லாத ''தமிழ்'' ஆண்டுகள்!
கலைஞர் சோற்றைத் திங்கச் சொல்கிறார்!
நெடுமாறன் அதற்கு எதிர்ப்பாக எதைத் தின்பார்?
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்  
------------------------------------------------------------------------------
காலம் என்பது நின்று விடாமல் தொடர்ந்து கொண்டே 
இருப்பது. எனவே காலத்தைக் கணக்கிடும் காலண்டர் 
முறையும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டே இருக்க
வேண்டும். ஆனால்,தமிழ் ஆண்டுகள் என்று அறியப் படும் 
அறுபது ஆண்டுகளும் தொடர்ச்சி அறுந்து போய்,
அறுபதுடன் நின்று விடுகின்றன. அதாவது இவற்றில் 
RECURRING EFFECT இல்லை. 
**
பிரபவ, விபவ, சுக்கில என்று ஆரம்பித்து குரோதன 
அட்சய என்று முடியும் இந்த அறுபது ஆண்டுகளில் 
தொடர்ச்சி இல்லை. அறுபத்தி ஒன்றாவது ஆண்டு எது?
எதுவும் இல்லை. காலக் கணிதம் (CALANDER) என்பது 
தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா!
தொடர்ச்சி இல்லாத காலண்டர் முறையால் என்ன பயன்?
**
பள்ளியில் படிக்கும் உங்கள் பையனை ஒன்று, இரண்டு,
மூன்று எண்ணச் சொல்லுங்கள். நூறு வரை எண்ணச் 
சொல்லுங்கள். அவன் அறுபது வரை சொல்லி விட்டு,
61 என்று சொல்லாமல், மீண்டும் 1, 2, 3 என்று சொல்கிறான் 
என்றால், நாம் அதை ஏற்போமா? ஏற்க மாட்டோம்.
அதுபோலத்தானே காலண்டர் முறையும்.
**
ஒருவருக்கு 61 வயது ஆகும்போது 
அவர் பிறந்த ஆண்டு மீண்டும் வந்து விடும்.
துன்முகி ஆண்டில் பிறந்த ஒருவர் 610 வயதை நிறைவு 
செய்யும்போது, மீண்டும் துன்முகி ஆண்டு வந்து விடும்.
ஆவணங்களிலும் பத்திரப் பதிவுகளிலும் இவ்வாறு "தமிழ்"
ஆண்டுகளைக் குறிப்பது எவ்வளவு பெரிய குழப்பத்தை 
விளைவிக்கும்! ஆவணங்கள் என்பவை காலத்தை வென்று 
நிற்க வேண்டியவை. நாம் பயன்படுத்தும் காலண்டர் முறை 
பெருங் குழப்பத்தை ஏற்படுத்தும் மூடத்தனமான முறை 
என்று தெரிந்த பின்பு, அதைக் கைவிடுவதுதானே சரி!
**
ஆகவேதான் கலைஞர் RECURRING EFFECT உள்ள 
திருவள்ளுவர் ஆண்டு முறையைக் கொண்டு வந்தார்.
வள்ளுவர் ஏசுநாதரை விட 31 ஆண்டுகள் மூத்தவர்.
கி.பி 2016க்குச் சமமான தி.பி ஆண்டு 2016+31=2047 ஆகும்.
(தி.பி= திருவள்ளுவருக்குப் பின்). திருவள்ளுவர் காலண்டர் 
என்று அழைக்கப்படும் இந்த முறை, சரியானதும் 
நிறைவானதும் ஆகும்.
**
கலைஞர் எதைச் செய்தாலும் எதிர்ப்பது ஜெயலலிதாவின் 
கொள்கை! எனவே ஜெயலலிதா அதை நீக்கினார். அப்போது 
தமிழறிஞர் பழ நெடுமாறன், கலைஞரை எதிர்த்தும் ஜெ.வின்   
பிரபவ-அட்சய காலண்டர் முறையை ஆதரித்தும் தினமணியில் 
நடுப்பக்கக் கட்டுரை எழுதி வீண் வாதம் செய்தார்.
நான் கேட்கிறேன், நெடுமாறன் அவர்களே, கலைஞர் சோற்றைத் 
திங்கச் சொல்கிறார்; கலைஞருக்கு எதிர்ப்பாகத் தாங்கள் 
எதைத் தின்பீர்கள்?
******************************************************************            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக