புதன், 22 ஏப்ரல், 2015

பூணூல் அணியலாமா? கலைஞர் கூறுவது என்ன?
--------------------------------------------------------------------------------------
சட்டை என்பது இருபதாம் நூற்றாண்டில் வந்த புதிய வரவு.
அதற்கு முன்பு இந்திய சமூகத்தில் சட்டை கிடையாது.
பார்ப்பனர் வரும்போதே, அவரின் மார்பில் உள்ள பூணூல்
அவர் மரியாதைக்கு உரியவர் என்று அடையாளம் காட்டும்.
அப்படி அடையாளம் காட்டத்தான் பூணூல் அணியும் 
பழக்கம் வந்தது. இன்று காலம் மாறி விட்டது. பனியன் 
மற்றும் மேல்சட்டைக்குள் பூணூல் மறைந்து கிடக்கிறது.
எனவே பூணூல் அணிவதன் நோக்கம் இன்று பயனற்றதாகி 
விட்டது. எனவே இன்றைய நிலையில், பூணூலை அகற்றி 
விடுவது என்பதுதான் பார்ப்பனர்களுக்குப் பெருமை சேர்க்கும்.
**
ஒரு சிலர் மட்டும் பூணூல் அணிவதும் மற்றவர்கள் அணியாமல் 
இருப்பதும் ஏற்றத்தாழ்வு ஆகும். இதை ஒழிக்க எல்லோரும் 
பூணூல் அணியலாமே என்று ஒருமுறை கலைஞரிடம் 
கேட்கப் பட்டது. அதற்கு கலைஞர் அளித்த பதில்:
97 சதம் பேர் பூணூலை அணிவதை விட, 3 சதம் பேர் அதைக் 
கழற்றி விடுவதுதான் நலம் பயக்கும்.
**
காலம் வெகுவாக மாறி விட்டது. இன்றும் பூணூலைக் 
கட்டிக் கொண்டு அழ வேண்டுமா என்ன? பார்ப்பன 
அன்பர்கள் சிந்திக்க வேண்டும்.
*************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக