வியாழன், 30 ஏப்ரல், 2015

(3) மார்க்சியத்தில் சாதியத்துக்குத் தீர்வு உள்ளதா?
தொடர் கட்டுரை-3; மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
------------------------------------------------------------------------------------- 
ரயில்பாதைகளும் தொழில் வளர்ச்சியும் சாதியை 
ஒழிக்கும் என்ற மார்க்சின் எதிர்பார்ப்பும் யதார்த்தமும்!
-------------------------------------------------------------------------------------
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நின்று நிலைத்து, கரடு   
தட்டிப்போன இந்தியாவின் சாதியம், தத்துவங்களுக்குச் 
சவால் விட்டுக் கொண்டு இன்றளவும் நீடித்துக் 
கொண்டிருக்கிறது. மானுட மொத்தத்தின் விடுதலையை 
லட்சியமாகக் கொண்ட மார்க்சியம், கொடிய சாதியத்தை 
ஒரு சிக்கலாகக் கருத்தில் கொண்டு, ஆராய்ந்து, அதன் 
வேர்களைக் கண்டறிந்து, சாதியத்துக்குத் தீர்வு தருகிறதா 
என்று காண்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
**
சாதியச் சிக்கலுக்கான காத்திரமான தீர்வு என்ற தரத்தில் 
அமைந்த மார்க்சிய போதனை எதுவும் மூல ஆசான்களின் 
படைப்பில் காணக் கிடைக்கவில்லை. எனினும், இது எந்த 
விதத்திலும் மார்க்சியத்துக்குப் பங்கம் ஆகாது என்பதை 
ஆயிரம் முறை உரத்துச் சொல்ல விரும்புகிறோம்.
**
அதே நேரத்தில், மூல ஆசான்கள் மார்க்சும் எங்கல்சும் 
தங்கள் படைப்புகளில், அங்கொன்றும் இங்கொன்றுமாக, 
இந்தியாவில் உள்ள சாதியம் குறித்து தங்கள் கண்டனத்தை 
வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
இக்கண்டனங்கள் சாதியம் வெறுக்கத் தக்கது, ஒழிக்கப்பட 
வேண்டியது  என்ற  பொருளை அழுத்தமாகத் தருகின்றன 
என்ற அளவில் வரவேற்கத் தகுந்தவை. ஆனால், இவை 
சாதியச் சிக்கலுக்கான தீர்வை வழங்கும் உள்ளடக்கம் 
கொண்டவை அல்ல.
**
ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொருளை அகல்விரிவாகவும் 
ஆழமாகவும் பார்த்து விடுவது நல்லது என்ற நோக்கில்,
மூல ஆசான்கள் சாதியம் குறித்துத் தெரிவித்துள்ள ஒவ்வொரு 
கருத்தையும் இங்கு காண்போம். அந்த அளவில், கால 
வரிசைப்படி, மார்க்ஸ் 1853-1854 காலத்தில்,சாதியம் பற்றிக் 
கூறியதை இக்கட்டுரையில் காண்போம்.
**
மார்க்ஸ் கூறுகிறார்:
-------------------------------       
"இந்தியா முன்னேற்றம் அடைவதற்கும் அதிகாரம் பெறுவதற்கும் 
பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது சாதியம். இந்தியாவின் 
சாதிகளை மரபு ரீதியான வேலைப்பிரிவினை தாங்கி நிற்கிறது.
நாடெங்கும் ரயில் பாதைகளை அமைப்பதும் அதன் 
தொடர்ச்சியாக ஏற்படும் நவீனத் தொழில் வளர்ச்சியும் 
இவற்றை உடைத்து எறியும்".
...........மார்க்ஸ் எங்கல்ஸ் தொகுப்பு நூல்கள், தொகுப்பு-12.......
அத்தியாயம்: இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால 
விளைவுகள், பக்கம்-221..............
***
ஆங்கில மூலம் பின் வருமாறு:-
---------------------------------------------------
"Modern industry resulting from the railway system, will dissolve the 
hereditary divisions of labour, upon which rest the Indian castes,
those decisive impediments to Indian progress and Indian power."    
---Marx Engels collected works vol-12, 1853-54, pp-221......
இதன் விளக்கத்தை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். (தொடரும்)
--------------------------------------------------------------------------------------------------------      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக